வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பிரபல சர்வ தேச கொலைகாரன் சார்லஸ் சோப்ராஜ் சிறையிலிருந்து விடுதலை ஆனான்.
பிரபல சர்வதேச கொலைகாரன் , சார்லஸ் சோப்ராஜ், 78 பிரான்ஸ் நாட்டில் பிறந்து, வளர்ந்த இவர், நேபாளத்தில், 1975ல், அமெரிக்க பெண்ணை கொன்ற வழக்கில், 2003ல், காத்மாண்டு நகரில் கைது செய்யப்பட்டார். நேபாள நீதிமன்றம், இவருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதால், சிறையில் அடைக்கப்பட்டார்.
![]()
|
தண்டனையை எதிர்த்து நேபாள சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் வயது முதுமை, உடல் நலம் காரணமாக சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.