வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா: மேற்குவங்கத்தில் பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் உ.பி. போன்று 'புல்டோசர் ஆட்சி' நடக்கும் என அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புல்டோசர் கொண்டு அடிக்கடி சட்டவிரோதமாக கட்டப்பட்ட ஆக்கிரமிப்புகளை இடிக்க உத்தரவிடுவதால் புல்டோசர் பாபா என விமர்சனம் செய்யப்பட்டு வருகிறார். இதனை ம.பி. பா.ஜ. முதல்வர் சிவராஜ்சிங் சவுகானும் பின்பற்றி வருகிறார்..
![]()
|
இந்நிலையில் மேற்குவங்க மாநில பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.வைச் சேர்ந்த சுவேந்து அதிகாரி இன்று கட்சி பொதுக்கூட்டம் ஒ்ன்றில் பங்கேற்று பேசியது, மேற்குவங்க மாநிலத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வரும். அப்படி ஆட்சிக்கு வந்தால், உ.பி.யில் நடப்பது போன்று 'புல்டோசர்' இடிப்பு ஆட்சி நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.