உதயநிதியின் முதல் நிகழ்ச்சியில் இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு அவமதிப்பு!

Updated : டிச 21, 2022 | Added : டிச 21, 2022 | கருத்துகள் (26) | |
Advertisement
ஒடிசா மாநிலத்தில் வரும் ஜனவரி 13 முதல் 29ம் தேதி வரை உலகக்கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி, ஹாக்கி கோப்பை, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை, மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஹாக்கி விளையாட்டு சங்கப்

ஒடிசா மாநிலத்தில் வரும் ஜனவரி 13 முதல் 29ம் தேதி வரை உலகக்கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி, ஹாக்கி கோப்பை, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.latest tamil news


சென்னை, மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஹாக்கி விளையாட்டு சங்கப் பிரதிநிதிகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது, மேடையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் மற்றும் மேயர் பிரியா உள்ளிட்ட 8 பேருக்கு முதல் வரிசையிலும், ஓய்வுபெற்ற மூத்த ஹாக்கி வீரர்களுக்கும் 2வது வரிசையிலும் இருக்கைகள் போடப்பட்டிருந்தன.

இதனால், இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி பயிற்சியாளரும், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய ஹாக்கி வீரருமான வாசுதேவன் பாஸ்கரன் கடுப்பாகினார். நிகழ்ச்சி

ஏற்பாட்டாளர்களில் ஒருவரிடம், இது என்ன கட்சி நிகழ்ச்சியா? இல்லை விருது வழங்கும் விழாவா?, முன்னாள் ஹாக்கி வீரர்களுக்கு பின் வரிசையிலா இருக்கை போடுவீங்க..? என்று கோபமாக லெஃப்ட்& ரைட்வாங்கினார். இதனால், அங்கிருந்தவர்கள் அதிர்ந்து போகினர்.

பின்னர், நீண்ட சலசலப்புக்கு பிறகு, வாசுதேவன் பாஸ்கரன் உள்பட 4 ஹாக்கி வீரர்களுக்கு முன்வரிசையில் இருக்கை போடப்பட்டது.

விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு நடக்கும் முதல் நிகழ்ச்சியிலேயே, இருக்கையால் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் விளையாட்டு வீரர்கள் அவமதிக்கப்பட்டிருப்பது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news

1980ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் வாசுதேவன் பாஸ்கரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (26)

binakam - chennai,இந்தியா
27-டிச-202215:30:31 IST Report Abuse
binakam உலக தமிழ் மாநாட்டிற்கு அழைப்பு இல்லையே அதை விடவா பேரன் செய்தது மோசம்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
25-டிச-202215:26:44 IST Report Abuse
Bhaskaran பிரியாவுக்கு என்ன தெரியும் வேனில் தொங்கி கொண்டு வரத்தெரியும்
Rate this:
Cancel
balakrishnan - Mangaf,குவைத்
23-டிச-202217:53:05 IST Report Abuse
balakrishnan தகுதியானவர்களை இவர்கள் எப்போதும் மதிப்பதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X