வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: எல்லா பிரச்சினைகளுக்கும் இடையே உக்ரைன் வீழவில்லை. இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகிறது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த, பிப்., 25ல் போர் தொடுத்தது. கடந்த ஒன்பது மாதங்களாக போர் நீடித்து வருகிறது. ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் கடும் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன.

போரில் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து, அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி வருகிறது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி முதன்முறையாக அமெரிக்க பயணம் மேற்கொண்டார்.
போலந்தின் செமிசோ நகருக்கு ரயிலில் பயணித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அங்கிருந்து அமெரிக்கா சென்று வாஷிங்டனில் இன்று (டிச.,22) அதிபர் ஜோ பைடனை சந்தித்து போர் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். உக்ரைனுக்கு கூடுதலாக 15 ஆயிரம் கோடி ரூபாய் ராணுவ தளவாடங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.

கண்ணியமான முறை:
அமெரிக்கா அதிரபர் ஜோ பைடன் பேசியவதாவது: சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் வளமான உக்ரைனின் தொலைநோக்கு பார்வை குறித்து நாங்கள் பகிர்ந்து கொண்டோம். இந்த போர் முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
கண்ணியமான முறையில் புடின் நடந்து கொண்டால் இது சாத்தியமாகும். ரஷ்யாவுக்கு எதிரான போரில், உக்ரைனை தனித்துவிட மாட்டோம் என்றும் அந்நாட்டிற்கு ஆதரவாக நேட்டோ படைகள் துணை நிற்கும் . இவ்வாறு அவர் பேசினார்.

சரணடையாது:
இதையடுத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியவதாவது: நீங்கள் கொடுக்கும் நிதியுதவி வெறும் தானம் என்று நினைக்காதீர்கள் இது முதலீடு. இந்த அவையில் நான் உரையாற்றுவது பெருமைக்குரியது. எல்லா பிரச்சினைகளுக்கும் இடையே உக்ரைன் வீழவில்லை. உயிருடன், ரஷ்யாவை உதைக்கிறது. இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகிறது.
ரஷ்யாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கிறது. அதிபர் பைடன் எங்களுக்கு துணை நிற்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. உக்ரைன் ஒருபோது ரஷ்யாவிடம் சரணடையாது. இவ்வாறு அவர் பேசினார்.