வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: '' காலாபாணி'' நாவலை எழுதியதற்காக எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி வருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள, 24 மொழிகளில் வெளியாகும் கதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு உள்ளிட்ட இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில், மத்திய அரசின் இலக்கிய அமைப்பான சாகித்ய அகாடமி, விருதுகளை வழங்கி வருகிறது. இதில், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் செப்புப் பட்டயங்கள் வழங்கப்படும்.

இந்த ஆண்டுக்கான பால சாகித்ய விருது, யுவ புரஸ்கார் விருதுகள் ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ள நிலையில், முக்கிய விருதான, சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. '' காலாபாணி'' நாவலை எழுதியதற்காக எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. '' காலாபாணி'' நாவல், காளையார்கோயில் போரை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் ஆகும்.
இவர் மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி.
சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களுக்கு கவர்னர் ரவி வாழ்த்து
காலா பாணி நாவலை எழுதிய மு.ராஜேந்திரன், நேமிச்சந்திராவின் யாத்வஷேம் கன்னட நூலை தமிழில் மொழி பெயர்த்த கே.நல்லதம்பி, பெருமாள் முருகனின் பூனாச்சி நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கல்யாண ராமனுக்க்கு சாகித்ய விருதுகள் அறிவிக்கப்பட்டதை அறிந்தேன். அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என கவர்னர் ரவி தெரிவித்து உள்ளார்.