வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சீனாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து டில்லியில் பிரதமர் மோடி, இன்று(டிச.,22) ஆலோசனை மேற்கொண்டார்.

சீனாவில், 'ஒமைக்ரான்' வகை கொரோனா தொற்றில், பி.எப்.,-7 என்ற புதிய வகை உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தொற்று பரவல் வேகம் எடுத்துள்ளது. இது குறித்து உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.
சீனாவில் பரவி வரும் பிஎப் 7 கொரோனா தொற்று குஜராத், ஒடிசா மாநிலங்களில் மொத்தம் 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், சுகாதாரத்துறை உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் மோடி இன்று(டிச.,22) ஆலோசனை மேற்கொண்டார்.

இதில் மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில், தற்போதைய நிலை குறித்தும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்தனர்.