வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சண்டிகர்: பொதுமக்களின் வலி எங்களுக்கு புரிகிறது, அதனால்தான் ₹ 500 க்கு காஸ் சிலிண்டர் மற்றும் இலவச சிகிச்சை உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறோம் காங்., எம்.பி ராகுல் கூறியுள்ளார்.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் துவங்கிய ராகுலின், 'பாரத் ஜோடோ யாத்திரை' கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் வழியாக சென்று, தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக ராஜஸ்தானில் யாத்திரை நடைபெற்ற நிலையில் யாத்திரை நேற்று (டிச.,21) ஹரியானா மாநிலத்திற்குள் நுழைந்தது. ராஜஸ்தானில் இருந்து முன்டஹா எல்லை வழியாக யாத்திரை ஹரியானாவுக்குள் நுழைந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று(டிச.,22) ஹரியானா மாநிலம் நூவில் மேற்கொண்டார்.
இதற்கிடையே காங்., எம்.பி ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டில்லியை நோக்கி வரும் இந்த மக்கள் கூட்டம் பணவீக்கம், வேலையின்மை மற்றும் வெறுப்புக்கு எதிரானது.
பொதுமக்களின் வலி எங்களுக்கு புரிகிறது, அதனால்தான் ₹ 500 க்கு காஸ் சிலிண்டர் மற்றும் இலவச சிகிச்சை உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறோம்.

இன்று நாட்டின் 100 இளைஞர்களை எடுத்து கணக்கிட்டால், அதில் 42 பேர் வேலையில்லாமல் உள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் வேலையில்லாத் திண்டாட்டமும் வறுமையும் தாண்டவமாடுகிறது. இதுதான் நீங்கள் சொன்ன வளர்ச்சியா?.
யாத்திரையை நிறுத்துங்கள் என்று எனக்கு கடிதம் எழுதினார்கள். இவை அனைத்தும் இந்த யாத்திரையை நிறுத்துவதற்கான சாக்குகள், அவர்கள் இந்தியாவின் உண்மையைக் கண்டு பயப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.