பா.ஜ., கூட்டணி அ.தி.மு.க.,வுக்கு அவசியம்!

Added : டிச 23, 2022 | கருத்துகள் (30) | |
Advertisement
சென்னை : 'பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லையெனில் வரும் 2024 லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு பெரும் இழப்பு ஏற்படும்' என, கொங்கு மண்டலத்தை சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமியிடம் கூறியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.உட்கட்சி மோதலால், அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. '2024 லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்த வேண்டுமானால் அ.தி.மு.க., ஒரே கட்சியாக
ADMK, Palanisamy, LokSabha Election 2024, அதிமுக, சென்னை, பாஜ, பழனிசாமி, லோக்சபா தேர்தல் 2024, Chennai,BJP, Edappadi Palanisamy, EPS,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : 'பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லையெனில் வரும் 2024 லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு பெரும் இழப்பு ஏற்படும்' என, கொங்கு மண்டலத்தை சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமியிடம் கூறியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

உட்கட்சி மோதலால், அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. '2024 லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்த வேண்டுமானால் அ.தி.மு.க., ஒரே கட்சியாக ஒன்றுபட்டு இருக்க வேண்டும்' என பா.ஜ., மேலிடம் வலியுறுத்தி வருகிறது.

'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்கள் இல்லாத நிலையில்அ.தி.மு.க., பிளவுபட்டிருப்பது, தி.மு.க.,வுக்கு சாதகமாகி விடும்' என அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் எடுத்துக் கூறியும் தினகரன், பன்னீர்செல்வத்துடன் இணைய பழனிசாமி மறுத்து வருகிறார்.

இப்படி அ.தி.மு.க., -- பா.ஜ., இடையே முரண்கள் ஏற்பட்டுள்ள நிலையில் '2019 லோக்சபா 2021 சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்ததால் சிறுபான்மையினர் ஓட்டுகள் முழுமையாக தி.மு.க.,வுக்கு சென்று விட்டன.

'இதுவே தோல்விக்கு காரணம். எனவே, பா.ஜ.,வுடன் கூட்டணி வேண்டாம்' என கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், ஜெயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பழனிசாமியிடம் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 17-ல் நெய்வேலியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் 'பா.ஜ., அரசு சொல்லும் பணிகளை தன் தலையில் வைத்து தி.மு.க., அரசு செய்கிறது.


latest tamil news

'தமிழகத்தில், பா.ஜ.,வை கடுமையாக விமர்சிக்கின்றனர். ஆனால் டில்லிக்கு சென்றால் மத்திய அரசிடம் கெஞ்சுகின்றனர். வரும் லோக்சபா தேர்தலில் தி.மு.க., - -பா.ஜ., கூட்டணி தான் மலரப் போகிறது' என கூறினார்.

அதற்கு பதிலளித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை 'அ.தி.மு.க.,வின் மூன்றாம் கட்ட தலைவர்கள் பேச்சுக்கு பதிலளிக்க விரும்பவில்லை' என, காட்டமாக கூறினார்.

முனுசாமி, ஜெயகுமார் போன்றவர்களும் அவ்வப்போது பா.ஜ.,வுக்கு எதிராக பேசி வருகின்றனர்.

இந்நிலையில் பழனிசாமியை சந்தித்த, நீலகிரி, கோவை திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தை சேர்ந்த மாவட்ட செயலர்கள் மற்றும் நிர்வாகிகள் சி.வி.சண்முகத்தின் பேச்சு பா.ஜ., கூட்டணிக்கு வேட்டு வைக்கும் வகையில் உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியுள்ள தாவது: கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டலம் தான் அ.தி.மு.க.,வை காப்பாற்றியது. இதற்கு, பா.ஜ., கூட்டணி முக்கிய காரணம்.

நீலகிரி, கோவை, திருப்பூரில், பா.ஜ.,வுக்கு இரட்டை இலக்கத்தில் ஓட்டு சதவீதம் உள்ளது.

கொங்கு மண்டலத்தின் மற்ற பகுதிகளில், பா.ஜ.,வுக்கு கணிசமான ஓட்டு வங்கி உள்ளது. அதுமட்டுல்லாது கொங்கு மண்டலம் முழுதும் பிரதமர் மோடிக்கு பெரும் செல்வாக்கு உள்ளது.

எனவே பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லாவிட்டால், வரும் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு பெரும் இழப்பு ஏற்படும்.

பன்னீர்செல்வம் தயவு இல்லாவிட்டால் தென் மாவட்டங்களிலும் வெற்றி பெறுவது கடினம்.

பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என்றால், அ.தி.மு.க., ஒன்றிய, கிளை நிர்வாகிகளில் பலர் பா.ஜ.,வுக்கு சென்று விடுவர். எனவே, எச்சரிக்கையுடன் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு கொங்கு மண்டல நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.

'எதுவாக இருந்தாலும் தேர்தல் நேரத்தில் முடிவெடுத்து கொள்ளலாம். அதற்கு இன்னும் காலம் இருக்கிறது' என அவர்களை பழனிசாமி சமாதானப் படுத்தியதாக தெரிகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (30)

Vaanambaadi - Koodaloor,இந்தியா
23-டிச-202215:42:25 IST Report Abuse
Vaanambaadi கூன் பாண்டிகளுடன் உறவே வேண்டாம்...அவனுங்க எவனும் நல்லவனில்லை
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
23-டிச-202215:08:36 IST Report Abuse
Rengaraj கருணாநிதி , ஜெ இல்லாமல் தமிழகம் சந்திக்கப்போகும் இரண்டாவது மக்களவை தேர்தல் . சென்றமுறை மக்கள் தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்ததற்கு தமிழகத்தை ஆண்ட அண்ணா.தி.மு.க வின் ஆட்சிமுறையும் அதன்மீது இருந்த கோபம், ஜீ.எஸ்.டீ , ரபேல் இவற்றை பற்றி ஒரு கட்டவிழ்க்கப்பட்ட பிரச்சாரம், மாதம் ருபாய் ஆறாயிரம் ஆகியவையே பெரிதாக பேசப்பட்டு தாக்கத்தை ஏற்படுத்தின. வரும் தேர்தலுக்கு என்னமாதிரி அம்சங்கள் எடுக்கப்படப்போகின்றன என்று இன்றுவரை கட்சிகள் பேசவில்லை. மக்கள் தேர்தலை சந்திக்கும்போது கூட்டணி அம்சங்களை விட ஒட்டுமொத்தமாக நாட்டுக்கு அவர்களால் நன்மையா என்று யோசிப்பார்கள். மத்தியில் ஆள்பவர்கள் நம் தொகுதிக்கு தனிப்பட்ட முறையில் என்ன செய்வார்கள் என்றும் யோசிக்கமாட்டார்கள். . அதுவும் பிரதமராக யார் இருக்கப்போகிறார் என்பதை வைத்து வோட்டு போடுவார்கள். ஆனால் இங்கிருந்து தேர்ந்தேடுக்கப்பட்ட எம்பி. கடந்த ஐந்து வருடங்களில் நமக்கு என்ன செய்தார் என்று யோசிப்பார்கள். ராகுல் மீதான நம்பிக்கை, அண்ணா தி.மு.க ஆட்சிமுறை மீதான கோபம் ஆகியவை தி.மு.க வுக்கு அனுகூலமாகியது. சட்டமன்ற தேர்தலில் ஒன்றுபடாமல் இருந்த அண்ணா தி.மு.கவின் மீதான அதிருப்தி, ஸ்டாலினின் யாத்திரை தி.மு.கவுக்கு சாதகமாகியது. ஆனால் தேர்ந்தேடுக்கப்பட்ட எம்.பி.களால் தமிழகத்துக்கு நன்மை விளைந்ததா, தங்கள் தொகுதிக்கு நன்மை கிடைத்ததா, கிடைத்தது யாரால் என்றெல்லாம் யோசித்து மக்கள் வோட்டுப்போட்டால், தற்போதைய எம்பி.க்கள் மீண்டும் வெற்றிபெறுவார்களா என்பது சந்தேகம்தான். எனவே இப்போது இருக்கும் கட்சிகள் பழைய கூட்டல் கழித்தல் கணக்குகளை நம்பி இருக்க கூடாது. பழைய ஓட்டுசதவீதையும் நம்பக்கூடாது. பழைய கணக்குகள் பார்க்க ஆரம்பித்தால் அப்போது இருந்த தலைமையான ஜெ கருநணாநிதி இவர்களையும் பார்க்க வேண்டும். யாருக்காக வோட்டு போட்டார்கள் என்றும் அறிந்து கொள்ள வேண்டும். தலைவர்களை வைத்துதான் சின்னங்கள் வெற்றி பெற்றன. இப்போது அவர்கள் இல்லை. எனவே பழைய சதவீதத்தை ஒப்பிட்டு பார்க்கக்கூடாது என்பதை இப்போது உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் தெரிந்துகொள்ள வேண்டும். இப்போது அரசியல் கட்சிகளுக்கு தேவை வோட்டு அறுவடையே தவிர வீராப்பு அல்ல.
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
23-டிச-202215:02:25 IST Report Abuse
venugopal s இரண்டு கட்சிகளும் ஒரு தேர்தலில் தனித்தனியாக நின்று போட்டியிட்டால் தெரிந்து விடும், யாருக்கு யார் அவசியம் என்று!
Rate this:
Muralidharan raghavan - coimbatore,இந்தியா
23-டிச-202216:55:38 IST Report Abuse
Muralidharan raghavanஅதை தி மு க காங்கிரஸ் வி சி க கம்யூனிஸ்ட் கட்சியினரிடமும் தனியாக போட்டியிட சொல்லுங்கள்...
Rate this:
KavikumarRam - Indian,இந்தியா
23-டிச-202216:56:20 IST Report Abuse
KavikumarRamஇதை தீயமுகாவுக்கு போய் மொதல்ல சொல்லவும். இதுவரைக்கும் தீயமுக கூட்டணி இல்லாம எந்த தேர்தல்ல நின்னுரூக்கு சொல்லுப்பா. மொதல்ல உன்னோட பின்புறத்துல இருக்கிற அழுக்கை கழுவு. அப்புறம் அடுத்தவன் பின்புறத்துல இருக்கிற அழுக்கை குறை சொல்லலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X