புதுடில்லி :அடுத்த நிதியாண்டுக் கான பட்ஜெட் அறிவிப்பில், சிலவகையான நிதி பரிமாற்றங்களுக்கு, 'பான்' எண் அவசியமில்லை என, அறிவிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![]()
|
இது குறித்து உயர்அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏற்கனவே ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ள நிலையில், வங்கிகளின் சிலவகையான பணப் பரிமாற்றங்களுக்கு, இனி பான் எண் கேட்க வேண்டாம் என நிதியமைச்சகம் கருதுகிறது.
![]()
|
பெரும்பாலான வங்கி கணக்குகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுவிட்ட நிலையில், பான் கார்டு கட்டாயம் என்பதை நீக்கிவிடலாம் என்றும், வருமான வரி துறை சட்டத்திலும் சிலவகை பரிமாற்றங்களுக்கு, பான் எண்ணுக்கு பதில் ஆதார் போதுமானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது என்றும், வங்கிகள் தரப்பிலிருந்து அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.வங்கிகள் தரப்பிலிருந்து இத்தகைய பரிந்துரைகள் வந்திருக்கும் நிலையில், நிதியமைச்சகம் இது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.