வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'நானும் ஒரு கிறிஸ்துவன் என உதயநிதி பேசியது, யாருக்கும் எரியாது' என தமிழக பா.ஜ., பதிலடி தந்துள்ளது.
கிறிஸ்தவ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி, ‛நான் கிறிஸ்தவன் என்பதில் பெருமைக்கொள்கிறேன்; இது சிலருக்கு வயிறு எரியவே செய்யும்' எனப் பேசியது சர்ச்சையாகியுள்ளது.
![]()
|
இதுகுறித்து, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கை: 'நானும் ஒரு கிறிஸ்துவன் என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். இன்னிக்கு எல்லா சங்கிகளுக்கும் எரியும்' என, உதயநிதி பேசியுள்ளார். இல்லை; யாருக்கும் எரியாது. அனைவரின் மனமும் குளிரும். இப்படி ஒரு மதவாதி, ஹிந்துவாக இல்லையே என்பதில் மகிழ்ச்சியே. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.