''காஞ்சிபுரம் மாவட்ட தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருத்தர், ராத்திரி, 11:00 மணிக்கு மேல தான், துறை சம்பந்தமான, 'மெசேஜ்'களை, 'வாட்ஸ் ஆப்' குழுவுல தட்டி விடுதாரு... இதுக்கு பதில் போடாத ஆண் ஊழியர்களை, மறுநாள் காலையில தன் அறைக்கு கூப்பிட்டு, கட்டி ஏறுதாரு வே...
''அதுவும் இல்லாம, பெண் ஊழியர்களை, 'கள ஆய்வுக்கு வாங்க'ன்னு தன் ஜீப்புல ஏத்திட்டு போயிடுதாரு... 'மத்த ஊழியர்கள் தப்பா நினைப்பாவளே'ன்னு பெண் ஊழியர்கள் சங்கடப்படுதாவ வே...
![]()
|
''ஏற்கனவே பெண்கள் விஷயத்துல, 'பஞ்சாயத்து' நடந்து தான், அந்த அதிகாரியை இந்த ஊருக்கு துாக்கி அடிச்சிருக்காவ... இங்க வந்தும் அடங்க மாட்டேங்காரு வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.