'நிலா, செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் குடியேறுவதற்கு 'சய்னோ பாக்டீரியா' போன்ற நுண்ணுயிரிகள் உதவிபுரியும் ' என கலிபோர்னியா பல்கலையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நடப்பாண்டு கணக்கெடுப்பின்படி, உலகில் கிட்டத்தட்ட 800 கோடி மக்கள் வாழ்கின்றனர். 2010ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 690 கோடியாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் உலக மக்கள் தொகையில் ஏற்பட்டிருக்கும் அதீத மாற்றம், பூமியில் மக்கள் வாழ தகுதியான இடம் கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் மனிதர்கள் நிலா மற்றும் செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கு 'சய்னோ பாக்டீரியா' போன்ற நுண்ணுயிரிகள் உதவிபுரியும் என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சிலி நாட்டில் உள்ள அடகாமா பாலைவனத்தில் உள்ள பாறைகளில் இருக்கும் சய்னோ பாக்டீரியாவின் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் உயிர்வேதியியல் செயல் முறையினை ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளனர்.
![]()
|
கலிபோர்னியா பல்கலையின் மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் துறையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உடன் இணைந்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலையை சேர்ந்த உயிரியல் துறை ஆராய்ச்சியாளர்களும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் இயற்கையாக கிடைக்கும் தாதுக்கள் மற்றும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட நானோசெராமிக்ஸ் போன்ற இரு வேறு பொருட்களையும் எவ்வாறு நுண்ணுயிரிகள் மாற்றி அமைக்கின்றன என்பதை ஆராய்ந்தனர்.
இதனை தெளிவாகக் கண்டறிய உயர் தெளிவுத்திறன் கொண்ட எலக்ட்ரான் நுண்ணோக்கி மற்றும் மேம்பட்ட ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் இமேஜிங் போன்ற அதி நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தினர் இந்த ஆராய்ச்சிக் குழு இதைப்பற்றிய தெளிவான ஆய்வுக்கட்டுரையை 'மெட்டீரியல்ஸ் டுடே பயோ' (Materials Today Bio) என்ற வலைதள இதழில் வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வுக் கட்டுரையில் புதுவித பயோமெட்ரிக் முறையில் சுரங்கங்களை அமைப்பதற்கு இந்த ஆராய்ச்சி வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
![]()
|
மேலும் இந்த ஆராய்ச்சியில் நிகழ்த்தப்படும் பெருமளவிலான 3டி பிரிண்டிங் அல்லது சேர்க்கை உற்பத்தியில் நுண்ணுயிரிகளை பயன்படுத்துவதன் மூலம், நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தில் நிலவும் கடுமையான சூழலில் சிவில் இன்ஜினியரிங் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மக்கள் குடியேறுவதற்கான முதல் அடியை எடுத்துவைப்பதாக அமையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement