சென்னை: 2023 ஆம் ஆண்டில் தமிழக சட்டசபை முதல் கூட்டத்தொடர் ஜனவரி 9 ம் தேதி கூடுகிறது.

இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்ட செய்தியில், 2023 ஜன. 9 ம் தேதி கவர்னர் உரையுடன் சட்டபேரவை மண்டபத்தில் காலை 10 மணிக்கு தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். எத்தனை நாள்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அலுவல் ஆய்வு குழு கூட்டம் அன்றே நடைபெறும். இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement