வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
''வாரும் ராஜமார்த்தாண்டன்... சூடா சுக்கு காபி குடியும்...'' என, நண்பரை வரவேற்ற அண்ணாச்சியே, ''புகார் சொல்றவங்களை அதிகாரி மிரட்டுதாங்க வே...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார்.
''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''கிருஷ்ணகிரி நகராட்சி பெண் அதிகாரி, நகர்வலமே போறதில்லைன்னு, ஆளுங்கட்சி கவுன்சிலர்களே அலுத்துக்கிடுதாவ... சமீபத்துல, 12வது வார்டு வழியா போன அதிகாரி காரை நிறுத்தி, 'சாக்கடை கால்வாயில குப்பை தேங்கி கிடக்கு பாருங்க'ன்னு ஒரு பெண் புகார் சொன்னாங்க வே...
![]()
|
''உடனே கோபமான அதிகாரி, 'நீங்களே குப்பையை போட்டுட்டு, எங்களை அள்ளச் சொல்றீங்களா'ன்னு கேட்டிருக்காங்க... அந்த பெண்ணும் விடாம, 'கால்வாயில காலி மது பாட்டில் நிறைய கிடக்குது... இதையும் நாங்க தான் போட்டோமா'ன்னு கேட்டிருக்காங்க வே...
''பெண் அதிகாரி, 'உங்கள் கடையே, கால்வாய் மேல தான் இருக்கு... முதல்ல உங்களுக்கு தான் அபராதம் போடணும்'னு மிரட்டிட்டு போயிட்டாங்க வே... இந்த மாதிரி யார் புகார் சொன்னாலும், அவங்களை மிரட்டி அனுப்புறதே அதிகாரிக்கு வழக்கமா போயிட்டு வே...'' என்றார், அண்ணாச்சி.