அழகிரியை புறக்கணிக்கும் காங்., கோஷ்டியினர்

Added : டிச 28, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ள ஐவரணியினர், கட்சி நிகழ்ச்சிகளை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற, ஐவரணியில் உள்ள கோஷ்டி தலைவர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். அதனால், அழகிரி தலைமையில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளில், கோஷ்டி தலைவர்கள் திருநாவுக்கரசர், தங்கபாலு,
Congress factions ignoring Alagiri   அழகிரியை புறக்கணிக்கும் காங்., கோஷ்டியினர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ள ஐவரணியினர், கட்சி நிகழ்ச்சிகளை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற, ஐவரணியில் உள்ள கோஷ்டி தலைவர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் களத்தில் இறங்கியுள்ளனர்.

அதனால், அழகிரி தலைமையில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளில், கோஷ்டி தலைவர்கள் திருநாவுக்கரசர், தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி, செல்வப்பெருந்தகை ஆகிய ஐவரும் பங்கேற்காமல் புறக்கணித்து வருகின்றனர்.

சோனியா பிறந்த நாள், கிறிஸ்துமஸ், நுால் வெளியீடு உள்ளிட்ட விழாக்களில், அழகிரி பங்கேற்றதால், இவர்கள் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், சென்னையில் இன்று எஸ்.சி., பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் தலைமையில் நடக்கும் கக்கன் சிலை திறப்பு விழாவில், அழகிரி பங்கேற்கிறார். ஐவரணிக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

ஆனால், புதிய தலைவர் பதவி ஏற்கும் வரை, கட்சி அலுவலகம் வருவதில்லை என, ஐவரணி முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

மேலும், இன்று கட்சியின், 138வது ஆண்டு விழாவை ஒட்டி மாரத்தான் ஓட்டம்; 150 அடி உயர கொடி கம்பத்தில் கொடி ஏற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இவற்றையும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க, கோஷ்டிகள் முடிவு செய்துள்ளன.

அதேபோல நாளை, ராகுல் நடைபயணத்தை முன்னெடுக்கும் வகையில், 'கையோடு கைகோர்ப்போம்' என்ற பிரசாரத்தை துவக்குவது குறித்து, மாவட்டத் தலைவர்களுடன் கலந்தாலோசிக்கவும், அழகிரி திட்டமிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க ஐவரணிக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் புறக்கணிப்பதுடன், தங்களது ஆதரவு மாவட்டத் தலைவர்களுக்கும் தடை போட்டு விட்டதாக கூறப்படுகிறது.

- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

rasaa - atlanta,யூ.எஸ்.ஏ
28-டிச-202209:36:51 IST Report Abuse
rasaa காங்கிரஸில் இதெல்லாம் சகஜமப்பா.... இல்லாத கட்சிக்கு இப்படி ஒரு அலப்பரையா?
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
28-டிச-202208:35:43 IST Report Abuse
சீனி மேலிட சூட்கேசை மட்டுமே நம்பியிருக்கும் பழைய சூட்கேஸ், தூக்கியெரிந்தால் மட்டுமே காங்கிரஸ் உருப்படும். தமிழக காங்கிரஸ் தலைமை பதவிக்கும், நிர்வாகிகளுக்கும் தகுதி 30-40 வயது என நிர்ணயித்தால், ஓரளவு காங்கிரசுக்கு மரியாதை இருக்கும். இல்லைன்னா காங்கிரசை பார்த்தால், "பழைய குருடி, கதவை திறடி" என மக்கள் போய்க்கொண்டே இருப்பார்கள்.... ஹாஹாஹா...
Rate this:
Cancel
jeyakumar - Wellington,நியூ சிலாந்து
28-டிச-202208:11:19 IST Report Abuse
jeyakumar Comedy... Comedy..cong.. Hindus finally like this
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X