நீரிழிவு நோய் என்பது ஒரு பொதுவான நாள்பட்ட நோயாகும்.இது வருங்காலத்தில் உலகளவில் 642 மில்லியன் மக்களைப் பாதிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக 2040 ஆம் ஆண்டில் இதன் பரவல் கணிசமாக அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக நீரிழிவு நோய் உள்ள பெண்களுக்கு ஈஸ்ட் தொற்று எளிதில் ஏற்பட்டு பல்வேறு வகையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. உடலில் உள்ள சூடான மற்றும் ஈரமான பகுதிகளில் ஈஸ்ட்கள் அதிகமாக வளரும்.
முறையாக சிகிச்சையாக்கப்படாவிட்டால் தொந்தரவுகள் கடுமையானதாக மாறும். பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்று ஏற்படுவதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
அறிகுறிகள்
![]()
|
உடலுறவின் போது அதிகப்படியான வலி
யோனி பகுதியைச் சுற்றி வலி மற்றும் சிவந்து போதல்சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு
பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுதல்
நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமாக இருக்கும்போது அல்லது யோனியில் மாற்றங்கள் ஏற்பட்டால் இந்த வகையான தொற்று ஏற்படலாம்.
காரணங்கள்
பொதுவாக ஈஸ்ட் சர்க்கரையில் உயிர்வாழ்வதால், உயர் ரத்த சர்க்கரை அளவு கொண்ட பெண்கள் இத்தகைய பூஞ்சை தொற்றுக்கு ஆளாகின்றனர், ஏனெனில் இது பிறப்புறுப்பின் பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் சமநிலையைச் சீர்குலைக்கிறது. உடல், அதிகப்படியான சர்க்கரையை வெளியிடுவதற்காக, பிறப்புறுப்பு சுரப்பு உட்பட உடல் திரவங்களைப் பயன்படுத்துகிறது.
இதில் ஈஸ்ட் வளர்ந்து தொடர்ந்து பெருகும். கர்ப்பம், கருத்தடை மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்புகள், பாதுகாப்பற்ற பாலியல் செயல்பாடுகள், ஈரமான அல்லது மிகவும் இறுக்கமான உள்ளாடைகளை அணிதல் அல்லது ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவை பிறப்புறுப்பு ஈஸ்ட் தொற்று வளர்ச்சிக்குப் பங்களிக்கும் சில காரணிகளாகும்.
சில சந்தர்ப்பங்களில், சோடியம் குளுக்கோஸ் கோ-டிரான்ஸ்போர்ட்டர் 2 (SGLT-2) இன்ஹிபிட்டர்கள் எனப்படும் நீரிழிவு மருந்துகளின் ஒரு வகை கூட ஈஸ்ட் நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம். ஏனெனில் அவை சிறுநீர்ப் பாதையைப் பயன்படுத்தி அதிகப்படியான சர்க்கரையைக் கடக்க உடலை ஊக்குவிக்கின்றன.
![]()
|
சிகிச்சை முறைகள்
தொற்றின் தீவிரத்தைப் பொறுத்து பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் மற்றும் களிம்புகளைப் பயன்படுத்தலாம். ஒரு வாரத்திற்கு இந்த மருந்துகளை உபயோகிக்கலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவை அறிந்து மருத்துவர்கள் சில வாய்வழி மருத்துகளையும் எடுத்துக்கொள்ளப் பரிந்துரை செய்வார்கள்.
மேலும் இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்த்தல், சூடான நீரில் குளிப்பதைத் தவிர்த்தல், பருத்தியில் ஆன உள்ளாடைகள் அணிவதன் மூலம் இவற்றைத் தடுக்கலாம்.