சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : டிச 28, 2022 | |
Advertisement
நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி: காவிரி, கொள்ளிடம், குடமுருட்டி ஆறுகளில் இருந்து மண்ணை அள்ளி கொண்டு செல்ல வசதியாகவே, திருவையாறு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. விவசாயிகள், எளிய மக்கள், உழைக்கும் மக்கள், அரசியல் வலிமை, அதிகார வலிமையற்ற மக்கள் என்பதால், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற திமிரில் செய்கின்றனர்; இதை பொறுத்துக் கொள்ள
பேச்சு,பேட்டி, அறிக்கை

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி: காவிரி, கொள்ளிடம், குடமுருட்டி ஆறுகளில் இருந்து மண்ணை அள்ளி கொண்டு செல்ல வசதியாகவே, திருவையாறு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. விவசாயிகள், எளிய மக்கள், உழைக்கும் மக்கள், அரசியல் வலிமை, அதிகார வலிமையற்ற மக்கள் என்பதால், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற திமிரில் செய்கின்றனர்; இதை பொறுத்துக் கொள்ள முடியாது. இது கொலைகார செயல், கொடுங்கோல் செயல். விவசாயிகளின் போராட்டத்தையும் மீறி சாலை அமைக்கப்பட்டால், நான் தடுத்து நிறுத்துவேன்.

* 'உங்களை மாதிரி ஆட்களுக்கும் வேலை தரணும்' என திட்டமிட்டே, தி.மு.க., அரசு செயல்படுவது போல தெரிகிறது!

***

பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: 'தமிழகத்தில் நிலுவையில் உள்ள அனைத்து சான்றிதழ்களையும் ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும்' என, வருவாய் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால், ஜாதி, இருப்பிடம், வருவாய், வாரிசு, பட்டா மாறுதல் போன்ற சான்றிதழ்கள் உடனடியாக கிடைக்கும். சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்றினால், மக்களுக்கு தேவையான சான்றிதழ்கள் கிடைத்து விடும். இந்த சட்டத்தை, வரும் சட்டசபை கூட்டத் தொடரில் கொண்டுவர வேண்டும்.

ஏற்கனவே அரசு பஞ்சப்படி, பயணப்படி தரலைன்னு வருவாய் துறை ஊழியர்கள் புலம்பிட்டு இருக்காங்க... இந்த சட்டத்தையும் கொண்டு வந்துட்டா அவங்க, 'மேல்' வருமானம் போயிடுமே!

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: தமிழக அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், கட்டடக் கலை, தோட்டக் கலை, இசை, வாழ்வியல் திறன் போன்றவற்றை போதிக்கும் பணியை, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் செய்து வருகின்றனர். அவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் மட்டும் மாத ஊதியமாக வழங்கப்படுகிறது. அவர்களை, 'பணி நிரந்தரம் செய்வோம்' என, வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., அரசு, தற்போது மவுனம் சாதிப்பது, அவர்களை வஞ்சிக்கும் செயல்.

தி.மு.க., தேர்தல் வாக்குறுதி எல்லாமே, 'போங்கு ஆட்டம் தான்'னு எல்லாருக்குமே தெரிஞ்சிடுச்சு... இதுல நீங்க புதுசு புதுசா கண்டுபிடிச்சு அறிக்கை கொடுத்து என்ன பயன்?

ஆம் ஆத்மி கட்சி தமிழக தலைவர் வசீகரன் அறிக்கை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைளை தமிழக அரசு மீண்டும் எடுத்து வருகிறது. அதே நேரத்தில், அரசு டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற போராடிய சட்டப் போராட்டக் குழு தலைவர், டாக்டர் பெருமாள் பிள்ளை, செயலர் டாக்டர் தாஹிர் மற்றும் மகளிர் அணி செயலர் டாக்டர் லதா பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு குற்ற குறிப்பாணையை அரசு வழங்கியிருப்பது, பழிவாங்கும் செயல்; இப்பிரச்னையில், முதல்வர் ஸ்டாலின் தலையிட வேண்டும்.

'குற்ற குறிப்பாணையை ரத்து செய்யாவிட்டால், அரசு டாக்டர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட மாட்டார்கள்'னு சொல்ல வர்றாரோ?

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X