வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
'கும்பாபிஷேகம் நடத்தறதா சொல்லி, பகல் கொள்ளை அடிச்சுண்டு இருக்கா ஓய்...'' என, ஆதங்கத்துடன் பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.
![]()
|
''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்துல, வரலாற்று பிரசித்தி பெற்ற, சோமேஸ்வரர் கோவில் கேள்விப்பட்டிருக்கீரா... இது, ஹிந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுல வர்ரது ஓய்...
''இந்தக் கோவிலுக்கு, 2015ல தான் கும்பாபிஷேகம் நடத்தினா... அப்ப, கோவில் வளாகத்துல இருக்கற பரிவார தெய்வங்களான, பைரவர், தட்சிணாமூர்த்தி, நந்திகேஸ்வரர், கொடிமரம் ஆகியவற்றை, உபயதாரர்கள் உதவியோட தனித்தனியா சீரமைச்சா ஓய்...
''இப்ப என்னடான்னா, திடீர்னு ஒரு அறக்கட்டளை முளைச்சிருக்கு... கும்பாபிஷேகம் நடத்தப் போறதா சொல்லி, அறக்கட்டளை சார்புல சிலர் வசூல் வேட்டையை தொடங்கிட்டா... 10 ஆயிரம் ரூபாய் குடுக்கற பக்தர்கள் பெயரை, கல்வெட்டுல போடறதா சொல்லி, வசூல் நடக்கறது ஓய்...
''இப்பவே, பல லட்சம் ரூபாய் வசூலாகிடுத்து... ஆனா, இதுவரை எந்தப் பணியும் நடந்தா மாதிரி தெரியல... பக்தர்கள் கேட்டா, 'அ.தி.மு.க., ஆட்சியில ஏற்கனவே கும்பாபிஷேகம் நடந்துட்டதால, தி.மு.க., அரசு அனுமதி தர மாட்டேங்கறது'ன்னு 'அசால்டா' சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''கள்ளச்சாராய விற்பனை களைகட்டுது பா...'' என, டீயை உறிஞ்சியபடியே அடுத்த தகவலை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''எந்த ஊருல வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''வேலுார் மாவட்டம், குடியாத்தம், கே.வி.குப்பம், பனமடங்கி, லத்தேரி பகுதிகள்ல, 24 மணி நேரமும் கள்ளச்சாராய விற்பனை கனஜோரா நடக்குது... பாக்கெட் சாராயம், 50 ரூபாய்க்கு விற்பனையாகுது பா...
''திருமணம், காது குத்து போன்ற விழாக்களுக்கு, 50 முதல் 100 லிட்டர் சாராய கேன்களை மொத்தமா சில ஆயிரம் குடுத்து, பலரும் வாங்கிட்டு போயிடுறாங்க... 'டாஸ்மாக்' கடைகள் பகல், 12:00 மணிக்கு தான் திறக்கிறதால, காலையில இருந்தே கள்ளச்சாராய விற்பனை களை கட்டுது... இதனால, டாஸ்மாக் வியாபாரம் படுத்துடுச்சு பா...
''தமிழக, ஆந்திர மாநில வியாபாரிகள் கைகோர்த்து இந்த தொழிலை செய்றாங்க... போலீசுக்கு, 'கவனிப்பு' பலமா இருக்கிறதால, அவங்களும் கண்டுக்கிறது இல்லை பா...'' என்றார், அன்வர்பாய்.
''வெறும், 6 அடி நீள கரும்பால அதிகாரிகள், 'திக் திக்' ஆகி கிடக்காவ வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''வழக்கமா,தமிழக அரசு வழங்குற பொங்கல் பரிசுத் தொகுப்புல, கரும்பும் இருக்குமுல்லா... இந்த கரும்புகளை, மாவட்ட வாரியா கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளர் குழு தான், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும்...
''போன பொங்கலுக்கு, ஒரு கரும்புக்கு போக்குவரத்து செலவையும் சேர்த்து, 33 ரூபாய் செலவு கணக்கு எழுதினாவ வே... 2.15 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரும்பு வாங்க மட்டும் அரசு, 71 கோடி ரூபாய் ஒதுக்குச்சு...
![]()
|
''இடைத்தரகர்களுடன் அதிகாரிகள் கூட்டு சேர்ந்து, குறைஞ்ச விலைக்கு கரும்பு கொள்முதல் செஞ்சதுல, அதிகாரிகளுக்கு எக்கச்சக்கமா கமிஷன் கிடைச்சது வே...
''இந்த வருஷம், அரசு அறிவிச்சிருக்கிற பொங்கல் பரிசுலயும் கரும்பு உண்டு... இதுல கமிஷன் கை மாறாம இருந்தா சரி வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement