லோக்சபா தேர்தலில் நமக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது: பழனிசாமி

Updated : டிச 29, 2022 | Added : டிச 29, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமி: முன்பு, கிராமங்களில் நமக்கு ஆதரவு அதிகம்; தற்போது நகரங்களிலும் ஆதரவு அதிகமாக உள்ளது. கட்சி நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று, தி.மு.க., ஆட்சியின் அவலங்களை எடுத்துரையுங்கள். தி.மு.க., ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி அதிகம்; எனவே, லோக்சபா தேர்தலில் நமக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. டவுட் தனபாலு: தி.மு.க., ஆட்சி மீது மக்களுக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமி: முன்பு, கிராமங்களில் நமக்கு ஆதரவு அதிகம்; தற்போது நகரங்களிலும் ஆதரவு அதிகமாக உள்ளது. கட்சி நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று, தி.மு.க., ஆட்சியின் அவலங்களை எடுத்துரையுங்கள். தி.மு.க., ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி அதிகம்; எனவே, லோக்சபா தேர்தலில் நமக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.



latest tamil news


டவுட் தனபாலு: தி.மு.க., ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி இருக்குதோ, இல்லையோ... ஜெயலலிதா, 'எக்கு' கோட்டையா உருவாக்கி வச்சிருந்த இயக்கத்தை, குரங்கு அப்பம் பிய்ச்ச கதையாக ஆக்கி வச்சிருப்பவங்க மேல கடும் கோபத்துல இருக்காங்க என்பதில், 'டவுட்' இல்லை!

பத்திரிகை செய்தி: அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் பங்கேற்க பழனிசாமி வந்தபோதும், அவர் சென்றபோதும், வரவேற்க கட்சியினர் முண்டியடித்தனர். அப்போது, தென்காசி மாவட்டம், கடையம் தெற்கு ஒன்றிய செயலர் உச்சிமாகாளி என்பவர், 'பேன்ட்' பையில் வைத்திருந்த, 1 லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் திருடி விட்டனர்.

டவுட் தனபாலு: எதிர்க்கட்சியா இருக்கும்போதே, பாக்கெட்ல 1 லட்சம் ரூபாயோட சுத்துறார்னா, ஆளுங்கட்சியா இருந்தப்ப, எத்தனை லட்சங்களோட சுத்தியிருப்பார்... ஒரு ஒன்றியமே இப்படின்னா, மாவட்டம், எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சர்கள் எத்தனை கோடிகள்ல புரண்டிருப்பாங்க என்ற, 'டவுட்' எட்டிப் பார்க்குதே!


latest tamil news


பத்திரிகை செய்தி: சென்னை தாம்பரத்தில் நடந்த தனியார் கல்லுாரி நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த போது, அங்கு காத்திருந்த தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரியின், 3 மாத குழந்தைக்கு, 'திராவிட அரசன்' என, பெயர் சூட்டினார்.

டவுட் தனபாலு: பெயர் படு கம்பீரமா இருக்கே... அதே மாதிரி, உங்க குடும்ப வாரிசுகளை மட்டுமே, தி.மு.க.,வுக்கு அடுத்தடுத்து அரசர்களாக முடி சூட்டாமல், இதுபோன்ற கட்சியினருக்கும் நீங்கள் சூட்டிய பெயருக்கு ஏற்ப பதவி கொடுத்து அழகு பார்ப்பீர்களா என்ற, 'டவுட்' எழுதே!

Advertisement




வாசகர் கருத்து (18)

zakir hassan - doha,கத்தார்
29-டிச-202222:01:31 IST Report Abuse
zakir hassan இனிமேல் அதிமுக எந்த தேர்தலிலும் வெற்றி பெற போவதில்லை காரணம் இந்த அம்மாவாசை எடப்பாடி யின் பதவி வெறி
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
29-டிச-202217:42:44 IST Report Abuse
J.V. Iyer இவரு எந்த உலகத்தில் இருக்கிறார்? சுய நினைவோடுதான் பேசுகிறாரா
Rate this:
Cancel
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
29-டிச-202215:10:46 IST Report Abuse
Anbuselvan வெற்றி நிச்சயம் என சொன்னவர் இப்போது வெற்றி வாய்ப்பு உள்என சொன்னவர் இப்போது வெற்றி ளது என்கிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X