வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமி: முன்பு, கிராமங்களில் நமக்கு ஆதரவு அதிகம்; தற்போது நகரங்களிலும் ஆதரவு அதிகமாக உள்ளது. கட்சி நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று, தி.மு.க., ஆட்சியின் அவலங்களை எடுத்துரையுங்கள். தி.மு.க., ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி அதிகம்; எனவே, லோக்சபா தேர்தலில் நமக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.
![]()
|
டவுட் தனபாலு: தி.மு.க., ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி இருக்குதோ, இல்லையோ... ஜெயலலிதா, 'எக்கு' கோட்டையா உருவாக்கி வச்சிருந்த இயக்கத்தை, குரங்கு அப்பம் பிய்ச்ச கதையாக ஆக்கி வச்சிருப்பவங்க மேல கடும் கோபத்துல இருக்காங்க என்பதில், 'டவுட்' இல்லை!
பத்திரிகை செய்தி: அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் பங்கேற்க பழனிசாமி வந்தபோதும், அவர் சென்றபோதும், வரவேற்க கட்சியினர் முண்டியடித்தனர். அப்போது, தென்காசி மாவட்டம், கடையம் தெற்கு ஒன்றிய செயலர் உச்சிமாகாளி என்பவர், 'பேன்ட்' பையில் வைத்திருந்த, 1 லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் திருடி விட்டனர்.
டவுட் தனபாலு: எதிர்க்கட்சியா இருக்கும்போதே, பாக்கெட்ல 1 லட்சம் ரூபாயோட சுத்துறார்னா, ஆளுங்கட்சியா இருந்தப்ப, எத்தனை லட்சங்களோட சுத்தியிருப்பார்... ஒரு ஒன்றியமே இப்படின்னா, மாவட்டம், எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சர்கள் எத்தனை கோடிகள்ல புரண்டிருப்பாங்க என்ற, 'டவுட்' எட்டிப் பார்க்குதே!
![]()
|
பத்திரிகை செய்தி: சென்னை தாம்பரத்தில் நடந்த தனியார் கல்லுாரி நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த போது, அங்கு காத்திருந்த தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரியின், 3 மாத குழந்தைக்கு, 'திராவிட அரசன்' என, பெயர் சூட்டினார்.
டவுட் தனபாலு: பெயர் படு கம்பீரமா இருக்கே... அதே மாதிரி, உங்க குடும்ப வாரிசுகளை மட்டுமே, தி.மு.க.,வுக்கு அடுத்தடுத்து அரசர்களாக முடி சூட்டாமல், இதுபோன்ற கட்சியினருக்கும் நீங்கள் சூட்டிய பெயருக்கு ஏற்ப பதவி கொடுத்து அழகு பார்ப்பீர்களா என்ற, 'டவுட்' எழுதே!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement