வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, இந்திய சந்தைகளில், அன்னிய முதலீடுகள் அதிகளவில் வந்துகொண்டிருந்த நிலையில், நடப்பாண்டில் சரிவைக் கண்டுள்ளது.
![]()
|
நடப்பாண்டில் கிட்டத்தட்ட 1.2 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை, அன்னிய முதலீட்டாளர்கள் வெளியே எடுத்துள்ளனர்.
இதுவரை வேறு எந்த ஆண்டிலும், இந்த அளவுக்கு அன்னிய முதலீடு வெளியேறியதில்லை. இதற்கு முன் அதிகபட்சமாக, கடந்த 2008ம் ஆண்டில், 53 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வெளியே எடுக்கப்பட்டிருந்தது.
உலகளவில், மத்திய வங்கிகள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த, வட்டியை உயர்த்தியதை அடுத்து, அன்னிய முதலீட்டாளர்கள், தங்கள் முதலீடுகளை திரும்ப பெற்றுஉள்ளனர்.
![]()
|
வட்டி உயர்வு மட்டுமின்றி; கச்சா எண்ணெய் விலையில் அதிக ஏற்ற_ இறக்கம், பொருட்கள் விலை உயர்வு, உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் போன்றவையும், அன்னிய முதலீடு வெளியேற காரணங்களாக அமைந்தன.
இருப்பினும், இந்தியாவின் பொருளாதார நிலை நன்றாக இருப்பதால், அடுத்த ஆண்டில், முதலீடு அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement