வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: விவசாயிகளை தொடர்ந்து நெசவாளர்களும் திமுக ஆட்சியில் வஞ்சிக்கப்படுகிறார்கள் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாடியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொங்கலுக்கு இலவச வேட்டி-சேலை திட்டத்தை முடக்கி, நெசவாளர்களை வஞ்சிக்க எண்ணுகிறது தி.மு.க அரசு, இதற்கு வழங்கப்பட்ட ரூ.487 கோடி 92 லட்சத்தை வெளிமாநில தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்பட்டால், அதைப் பார்த்துக்கொண்டு பா.ஜ., சும்மா இருக்காது.
ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, முந்தைய ஆட்சிக் காலங்களில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் ஒவ்வொன்றையும் கிடப்பில் போடும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது திமுக அரசு. வரும் பொங்கலுக்கு கரும்பு கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்க நினைத்த திமுக தற்போது இலவச வேட்டி சேலை திட்டத்தை முடக்கி நெசவாளர்களை வஞ்சிக்க நினைக்கிறது.

ஏழை எளிய மக்களும், நெசவாளப் பெருமக்களும் பலன் பெறும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம், திமுகவுக்கு ஆதரவான தனியார் நிறுவனங்கள் மட்டுமே பயனடையும் வகையில் திமுக அரசு நடக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.