திண்டிவனம் : விழுப்புரம் கிழக்கு மாவட்ட அ.ம.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடந்தது.
மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். கட்சியின் மாநில துணைச் செயலாளர் செந்தமிழன், நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., கணபதி, மாவட்ட செயலாளர்கள் முத்து, குமரன், மாநில ஐ.டி., பிரிவு செயலாளர் முத்துக்குமார், நிர்வாகிகள் கதிர்வேல், ரங்கநாதன், தமிழ்ச்செம்மல், வழக்கறிஞர் முருகன், வாஞ்சிநாதன், பிரபுசாஸ்தா உட்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில், கட்சியின் கொடியை மாநில துணைச் செயலாளர் செந்தமிழன் ஏற்றி வைத்தார்.