வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை--'மத்திய பா.ஜ., அரசின் அறிவிப்பால், 2023ல் தமிழக அரசு, 1,000 கோடி ரூபாய் வரை சேமிக்க உள்ளதால், தேர்தல் வாக்குறுதிகளை, ஜனவரி முதல் நிறைவேற்ற வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
![]()
|
அவரது அறிக்கை:
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரருக்கும் 5 கிலோ அரிசியை, கிலோ 3 ரூபாய் விலையில், மாநில அரசுக்கு வழங்குகிறது.
உணவு பாதுகாப்பு சட்டத்தினால், தமிழகத்தில் 3.60 கோடி பேர் பயன் பெறுகின்றனர்.
தமிழகத்திற்கு, 2021 -- 22ல் மானிய விலையில், 294 கோடி கிலோ உணவு தானியங்களையும்; நடப்பு நிதியாண்டில் நவம்பர் வரை, 183 கோடி கிலோ தானியங்களையும், மத்திய பா.ஜ., அரசு வழங்கியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தற்போது, மத்திய அரசு 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரை, 2 லட்சம் கோடி ரூபாய் செலவில், அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
![]()
|
மத்திய பா.ஜ., அரசின் அறிவிப்பால், 2023ல் தமிழக அரசு, 1,000 கோடி ரூபாய் வரை சேமிக்க உள்ளது.
எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல், 2023 ஜனவரி முதல் பெட்ரோலுக்கு 2 ரூபாயும், டீசலுக்கு 4 ரூபாயும், வீட்டு சமையல் காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியத்தையும், தி.மு.க., அரசு வழங்கி, தங்கள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.