தேர்தல் கமிஷன் அழைப்பு கடிதம்: அ.தி.மு.க.,வில் குழப்பம் அதிகரிப்பு
தேர்தல் கமிஷன் அழைப்பு கடிதம்: அ.தி.மு.க.,வில் குழப்பம் அதிகரிப்பு

தேர்தல் கமிஷன் அழைப்பு கடிதம்: அ.தி.மு.க.,வில் குழப்பம் அதிகரிப்பு

Updated : டிச 31, 2022 | Added : டிச 31, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
சென்னை: அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்து, 'அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்' எனக் குறிப்பிட்டு, தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பி இருப்பது, அக்கட்சியில் குழப்பத்தை அதிகப்படுத்தி உள்ளது.அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் இருந்தனர். இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதலால், கட்சி உடைந்தது.
Election Commission call letter: Increasing confusion in ADMK  தேர்தல் கமிஷன் அழைப்பு கடிதம்: அ.தி.மு.க.,வில் குழப்பம் அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்து, 'அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்' எனக் குறிப்பிட்டு, தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பி இருப்பது, அக்கட்சியில் குழப்பத்தை அதிகப்படுத்தி உள்ளது.


அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் இருந்தனர். இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதலால், கட்சி உடைந்தது. தற்போது, இடைக்கால பொதுச்செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.


ஆனாலும், ஒருங்கிணைப்பாளராக நீடிப்பதாக கூறி வரும் பன்னீர்செல்வம், தனி அணியாக செயல்படுகிறார். இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.


இந்த சூழ்நிலையில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக, பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடம், இந்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டுள்ளது.


இது தொடர்பாக இந்திய சட்ட ஆணையம், அ.தி.மு.க., அலுவலகத்துக்கு அனுப்பிய கடிதத்தில், 'பொதுச் செயலர் பழனிசாமி' எனக் குறிப்பிட்டிருந்தது. இது தங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என, பழனிசாமி தரப்பினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


latest tamil news

இதை எதிர்த்து, பன்னீர்செல்வம் தரப்பினர் தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதி உள்ளனர். கடித நகலை, பன்னீர்செல்வம் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி, நேற்று முன்தினம் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து அளித்தார்.


இதற்கிடையே, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் இடத்தில் இருந்தபடி, சொந்த மாநிலத்தில் நடக்கும் தேர்தலில் ஓட்டளிக்க வசதியாக, 'ரிமோட் ஓட்டிங்' என்ற சாதனத்தை, தேர்தல் கமிஷன் உருவாக்கி உள்ளது.


இது குறித்து விளக்கவும், கருத்துக்களை கேட்கவும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கூட்டத்தை, தேர்தல் கமிஷன், வரும் 16ம் தேதி டில்லியில் கூட்டி உள்ளது. இதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு, கடிதம் அனுப்பி உள்ளது. கட்சிக்கு இருவர் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, அ.தி.மு.க.,வுக்கு தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அனுப்பி உள்ள கடிதம், 'ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்' என முகவரியிட்டு அனுப்பப்பட்டு உள்ளது.


இது பழனிசாமி தரப்பினரிடம் அதிர்ச்சியையும், பன்னீர்செல்வம் தரப்பினரிடம் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் கமிஷன் அனுப்பிய கடிதம், அ.தி.மு.க.,வில் குழப்பத்தை அதிகரித்துள்ளது.


இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறுகையில், ''தேர்தல் கமிஷனில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்றே இருப்பதால், அதை குறிப்பிட்டு, கடிதம் அனுப்பி உள்ளோம்,'' என்றார்.


பன்னீர்செல்வம் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ''அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பி உள்ளார். ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம் உள்ளார். இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தன் பதவியை ராஜினாமா செய்து விட்டார். எனவே, பன்னீர்செல்வம் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்பர்,'' என்றார்.5 கட்சிகள்


தமிழகத்தை பொறுத்தவரை அங்கீகாரம் பெற்ற கட்சிகளான அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ம.க., மற்றும் முஸ்லிம் லீக் ஆகியவற்றுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
வாசகர் கருத்து (9)

Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
31-டிச-202222:40:40 IST Report Abuse
Anbuselvan இப்போது தமிழக தேர்தல் அதிகாரி அதிமுகவின் சின்னத்தை முடக்க இந்திய தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை செய்வார். அதிமுகவிற்கு செக் வைப்பார்கள் என தோன்றுகிறது
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
31-டிச-202222:20:59 IST Report Abuse
Vijay D Ratnam அதிமுகவின் 98 சதவிகித பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடி முடிவெடுத்து கட்சியில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரண்டு பதவிகளை ரத்து செய்துவிட்டோம் என்று சொல்லி எடப்பாடி கே பழனிசாமி அணியினர் திமுக மன்னிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷன் அழைப்பை திருப்பி அனுப்பவேண்டியதுதானே.
Rate this:
Cancel
Raja Vardhini - Coimbatore,இந்தியா
31-டிச-202217:44:38 IST Report Abuse
Raja Vardhini அதிமுகவில் ஒரு குழப்பமும் இல்லை. திமுகவின் கையாள் தமிழக தேர்தல் ஆணையம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X