'' சுமூகமான உறவையே இந்தியா விரும்புகிறது'': ஜெய்சங்கர்

Updated : டிச 31, 2022 | Added : டிச 31, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
நிகோசியா: அனைவருடனும் சுமூகமான உறவையே இந்தியா விரும்புகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.சைப்ரஸ் சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிகோசியா நகரில் அங்கு வசிக்கும் இந்தியர்களுடன் கலந்துரையாடினார்.அப்போது, ஜெய்சங்கர் பேசியதாவது: பயங்கரவாதத்தின் மூலமாக யாரும் இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது.
India wants smooth relations with all: Jaishankar  '' சுமூகமான உறவையே இந்தியா விரும்புகிறது'': ஜெய்சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நிகோசியா: அனைவருடனும் சுமூகமான உறவையே இந்தியா விரும்புகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.


சைப்ரஸ் சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிகோசியா நகரில் அங்கு வசிக்கும் இந்தியர்களுடன் கலந்துரையாடினார்.


அப்போது, ஜெய்சங்கர் பேசியதாவது: பயங்கரவாதத்தின் மூலமாக யாரும் இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது. அதனை நாம் ஏற்று கொள்ளவும் மாட்டோம். இந்தியா அனைவருடனும் சுமூகமான உறவை பேணுவதற்கே விரும்புகிறது. சுமூகமான உறவு என்பதற்காக மன்னித்து கொண்டே இருப்பது அல்லது விலகி நின்று பயங்கரவாதத்தை வேடிக்கை பார்ப்பது என்று அர்த்தம் கிடையாது. இதில் இந்தியா தெளிவாக உள்ளது.


latest tamil news

கோவிட் காலத்தில் எல்லை பிரச்னைகள் கொஞ்சம் அதிகரித்தது. எல்லை விவகாரத்தில் இந்தியா - சீனா உறவு சுமூகமாக இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். தன்னிச்சையாக எல்லை கட்டுப்பாடு கோட்டை மாற்றி அமைப்பதற்கு இந்தியா உடன்படவில்லை என்பதால், அதில் சிக்கல் உருவாகி இருக்கிறது.


வெளியுறவு கொள்கை, தேச பாதுகாப்பு ஆகியவை குறித்து யோசிக்கும் போது, அரசின் ராஜதந்திரம், வெளியுறவு கொள்கைகள் பற்றி சில விஷயங்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். சமாதானத்தை விரும்பும் நாடாக இந்தியாவிற்கு பல எதிர்பார்ப்புகள் உள்ளன. தற்போது சுதந்திரமான பொருளாதார பலம் மிக்க நாடாக இந்தியா பார்க்கப்படுகிறது. இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

canchi ravi - Hyderabad,இந்தியா
01-ஜன-202311:13:34 IST Report Abuse
canchi ravi அற்புதமான வெளியுறவு அமைச்சர். எந்த நாட்டு பாச்சாவும் பலிக்காது இவரிடம். துருக்கி பாகிஸ்தானுடன் சேர...
Rate this:
Cancel
31-டிச-202221:53:33 IST Report Abuse
SARAVANAN J GURU அகிம்சையை விதைத்து சுதந்திரம் என்ற வெற்றியை அறுவடை செய்த பூமியல்லவோ நம் நாடு.
Rate this:
01-ஜன-202310:03:16 IST Report Abuse
பாலாவெற்றி அகிம்சை போராட்டத்தால் கிட்டவில்லை. இதுவே நம் நாட்டின் மறைக்கப்பட்ட வரலாறு....
Rate this:
Cancel
fgdgfg - chennai,இந்தியா
31-டிச-202220:59:45 IST Report Abuse
fgdgfg அதைத்தான் அனைவரும் செய்தார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X