மின் - ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு

Updated : டிச 31, 2022 | Added : டிச 31, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு ஜன.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று(டிச.,31) கடைசி நாள் ஆக அறிவிக்கப்பட்டு இருந்தது.சென்னையில் நிருபர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது: ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதற்கான காலக்கெடு ஜன.,31 வரை நீட்டிக்கப்படுகிறது. இதற்கு பிறகு காலக்கெடு நீட்டிப்பு
aadhar,ebconnection, senthilbalaji, aadharcard, மின்இணைப்பு, ஆதார், செந்தில்பாலாஜி, அமைச்சர்,

சென்னை: மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு ஜன.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று(டிச.,31) கடைசி நாள் ஆக அறிவிக்கப்பட்டு இருந்தது.


சென்னையில் நிருபர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது: ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதற்கான காலக்கெடு ஜன.,31 வரை நீட்டிக்கப்படுகிறது. இதற்கு பிறகு காலக்கெடு நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது. இதனால், ஜன.,31 வரை காத்திருக்காமல், ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் உடனடியாக இணைக்க வேண்டும்.நாளை (ஜன.,1) விடுமுறை நாள். இதனால் ஜன.,2 முதல் மின் இணைப்பு - ஆதார் இணைப்பு பணி நடக்கும்.



latest tamil news


தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இனிமேல், மக்களின் வசதிக்காக, நடமாடும் முகாம்கள் அமைக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆதார் - மின் இணைப்பு எண் இணைக்கப்படும்.தற்போது வரை 1.60 கோடி பேர் ஆதாரை இணைத்துள்ளனர். இன்னும் 75 லட்சம் பேர் இணைக்க வேண்டியுள்ளது. ஆதார் - மின் இணைப்பால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட மாட்டாது. இது தொடர்பாக வரும் ஆதாரமற்ற தகவல்கள் மற்றும் வதந்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

M Ramachandran - Chennai,இந்தியா
31-டிச-202220:44:51 IST Report Abuse
M  Ramachandran திருட்டு கொள்ளையை கார அரசு அவர்களய் தேர்த்தெடுத்த மக்களய் பழி வாங்கும் அரசு தினம் தினம இன்று எதில் கைய்ய வைக்கிறார்களோர் என்று நடுநடுங்க வய்க்கும் அரசு அகோர முகம் கொண்ட அரசு. .... பக்கத்துக்கு மாநிலம் கேரள சேட்டன்கள் இப்போ தமிழன் ஆண்டாலும் பரவாயில்லை இஙகு அண்ணாமலைய வந்து எண்கல்லை ஆளட்டும் என்ற அளவுக்கு பேச ஆறம்பித்து விட்டார்கள் . இப்படியெ போனால் ள் அநத நிலைமை இஙகு வர வெகு நாட்கள் இல்லை.
Rate this:
Priyan Vadanad - Madurai,இந்தியா
01-ஜன-202300:58:09 IST Report Abuse
Priyan Vadanadமோத்திய அரசை இப்படியெல்லாம் விமர்சனம் செய்யக்கூடாது....
Rate this:
Cancel
Senthil kumar - coimbatore,இந்தியா
31-டிச-202218:09:24 IST Report Abuse
Senthil kumar அனைவரின் அசையும் மற்றும் அசையாத சொத்துக்களையம் ஆதரில் இணைத்தல் மிகவும் வரவேற்கத்தக்கது. (இதற்கு மட்டும் அரசியல்வாதிகள் உடன்படமாட்டார்கள் )
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
31-டிச-202217:36:02 IST Report Abuse
Lion Drsekar பொறுத்திருந்து பாருங்கள் நான் ஜோசியர் அல்ல, ஆனால் நினைப்பது சொல்வது நடந்தே தீரும், இது சத்தியம் . கடந்த 60 ஆண்டுகளாக நான் சொன்னவை எதுவுமே தப்பியது இல்லை, இந்த ஆதார் கார்து இணைத்த பின்பு ஒரு வீட்டுக்கு மட்டுமே அரசாங்கம் வீட்டு உபயோகத்துக்கான விலையை நிர்ணயம் செய்து மற்ற வீடுகளுக்கு அதாவது இணைப்புகளுக்கு வியாபர கமர்ஷில் விலையில் பில் போடுவார்கள் , பிறகு பயனாளிகள் எங்கெங்கு யார் யார் வசிக்கிறார்கள் என்று நடையாய் நடந்து என் பெற்றோர்கள் இருக்கிறார்கள், உறவினர்கள் இருக்கிறார்கள் என்று இரத்த தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பித்து அதற்குள் இவர்கள் நினைத்ததை முடித்து விடுவார்கள், நாட்டைப்பாதுகாக்க முப்படை இருப்பது போல் நமக்கும் அன்றாடம் வரி ஏற்றுவதற்கு முப்படை இருக்கிறது , இவர்கள் மாநரகாட்சி, குடிநீர் வாரியம், இவர்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்புடையவர்கள், ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஒற்றுமையாக வாரிப்போடுவதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்லர். இவர்களும் அதே போன்று வரியை மாற்றிப்போடுவார்கள் முடிந்தது நடுத்தர மக்களின் நிலை, பொறுத்திருந்து பாருங்கள், முன்பு நான் ஒரு பதிவு அனுப்பியிருந்த அது பிரசுரிக்கப்படவில்லை சற்று வறுத்த, என்ன என்றால் சாதாரண மின்விளக்குகளுக்கு பதிலாக எல் இ டி பல்பை குறைந்த விலைக்கு அறிமுகபடுத்தினார்கள் , குறைவான மின்சார கட்டணம் காட்டினால் போதும் என்று, ஏன்ன ஆயிற்று, எல்லோரும் பழைய குழல் விளக்குகளை முற்றிலுமாக மாற்றி குறைந்த பயனுள்ள புதிய பல்புக்கு நாடே மாறியது, மின்சாரக் கட்டணம் குறைந்தது, இப்போது மின்சாரக் கட்டணம் எகிறிவிட்டது ? அதோடு மட்டும் நில்லாமல் எல் இடி பல்புகள் விலை இமயமலைக்கே சென்றுவிட்டது . முதலில் மக்களுக்கு நன்மை செய்ய இந்த புதிய பல்பை பயன்படுத்தினால் நீங்கள் மின்கட்டணம் குறைத்து கட்டலாம், எல்லோரும் புதிய பல்புக்கு மாறினார்கள், பிறகு பல்பு விலை மற்றும் மின் கட்டணம் ஏற்றிவிட்டார்கள் , இப்போது அதிலும் திருப்தி அடையாத துறைகள் அது எப்படி ஒரே நபர் பல இணைப்புகளை வைத்துக்கொண்டு ஒரே அதுவும் அவர்கள் கணக்கில் குறைந்த அளவில் பணம் காட்டுகிறார்கள், இவர்களுக்கு தேவையோ ஒரு வீடுதான் அப்படி இருக்க புடிடா என்ற நோக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை , வெள்ளைக்காரன் காலங்களில் நடந்த அதே அவளை நிலைதான் இன்றும் நடக்கிறது, அவனே பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு திரும்பும் இடமெல்லாம் , பல முனை வரிகள், வாழ்க தமிழகம் , சட்டத்துக்கு மிகவும் கட்டுப்பட்டவர்கள் ஆகவே என்ன ஏற்றினாலும் தங்குவார்கள் , மற்றொரு உதாரணம், அதே அமைச்சகத்தில் வரும் சாராயம் தரமோ மிக மட்டம் விலையோ மிக அதிகம் கிக்காக குடிப்பவர்கள் எவ்வளவு குடித்தாலும் அவர்களுக்கு நிம்மதி இல்லை, ஆகவே அதிக விலை கொடுத்து ஒவ்வொரு பாட்டிலுக்குள் லஞ்சம் கொடுத்து என்னதான் தரமற்ற சரக்கை குடித்தாலும் பயன் இல்லையே என்று குமுறுகிறார்கள், என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது, எல்லாம் புரிகிறது ஆனால் எதுவுமே புரியாமல் இருக்கிறது வந்தே மாதரம்
Rate this:
Priyan Vadanad - Madurai,இந்தியா
01-ஜன-202301:03:40 IST Report Abuse
Priyan Vadanadஇதெற்கெல்லாம் இந்த ஆதார் கார்டுதான் முன்காரணம் என்று ஏன் எழுத தயக்கம்? எதோ ஒரு சூழ்ச்சியில் தமிழகமும் சிக்கிக்கொண்டது என்றுதான் நினைக்க தோன்றுகிறது. இப்பொது தமிழக அரசை குறை சொல்வதில் அர்த்தமில்லை. இருப்பினும் உங்கள் கருத்து உண்மையானதுவே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X