புத்தாண்டு தினம்: தலைவர்கள் வாழ்த்து

Updated : டிச 31, 2022 | Added : டிச 31, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை: 2022ம் ஆண்டு இன்றோடு முடிகிறது. இன்றுதான், வார கடைசி நாள், மாத கடைசி நாள், வருடத்தின் கடைசி நாள் ஆகும். இந்நிலையில் 2023ம் ஆண்டு புத்தாண்டு தினத்தையொட்டி, கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.கவர்னர் ரவி ; தமிழகத்தின் சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு
New Years Day 2023: Greetings from Chiefs  புத்தாண்டு தினம்: தலைவர்கள் வாழ்த்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: 2022ம் ஆண்டு இன்றோடு முடிகிறது. இன்றுதான், வார கடைசி நாள், மாத கடைசி நாள், வருடத்தின் கடைசி நாள் ஆகும். இந்நிலையில் 2023ம் ஆண்டு புத்தாண்டு தினத்தையொட்டி, கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



latest tamil news


கவர்னர் ரவி ;

தமிழகத்தின் சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், வெற்றியை கொண்டு வரட்டும். எனக் கூறியுள்ளார்.



latest tamil news

Advertisement


முதல்வர் ஸ்டாலின் :

அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது.


உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023-இல் வீறுநடை போடுவோம். புத்தாண்டு வருக, புதுவாழ்வு தருக எனக் கூறியுள்ளார்.



அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் பழனிசாமி :

புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.



latest tamil news


இருளும் சோகமும் விலகி இருக்க, புதிய ஆண்டு பிரகாசமும், நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கட்டும்; நிறைந்த வளம், நிறைந்த ஆரோக்கியம், மிகுந்த சந்தோஷம், வெற்றி இவற்றையெல்லாம் இந்த இனிய புத்தாண்டு மக்களுக்கு வழங்கட்டும் எனக் கூறியுள்ளார்.



latest tamil news



பாமக நிறுவனர் ராமதாஸ் :

கடந்த 2020-ஆம் ஆண்டில் தொடங்கி, 2023-ஆம் ஆண்டு வரை கடந்த 4 ஆண்டுகளாக புத்தாண்டுடன் தவிர்க்க முடியாமல் இணைந்திருக்கும் விஷயம் கொரோனா தான். கடந்த மூன்று ஆண்டுகளாக நாட்டையும், மக்களையும் மிரள வைத்த கொரோனா இப்போது புதிய வடிவத்தில் உருமாறி நம்மை மிரட்டிக் கொண்டிருக்கிறது.



latest tamil news


2023-ஆம் ஆண்டு நாம் எதிர்பார்த்ததைப் போலவே இனிப்பாக அமையும்.அனைவருக்கும் அனைத்து நலன்களும், வளங்களும் கிடைக்கும்; பொருளாதாரம் வளரும்; மகிழ்ச்சி பெருகும்; அமைதியும், நிம்மதியும் கிடைக்கும்; அவற்றை சாதிக்க நாம் கடுமையாக உழைப்போம் எனக் கூறியுள்ளார்.



அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் :

இனம், மதம், மொழி, நாடு ஆகியவற்றையெல்லாம் தாண்டி உலகெங்கும் மக்கம் கொண்டாடும் புத்தாண்டில் அனைவருக்கும் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.



latest tamil news


தமிழகத்தின் நலன்களையும், தமிழகத்தின் உரிமைகளையும் காத்து நிற்பதற்கான வலிமையை புத்தாண்டு தந்திடட்டும் எனக் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

31-டிச-202216:44:25 IST Report Abuse
ஆரூர் ரங் பாரத மக்களாகிய நமக்கு இது புத்தாண்டு அல்ல. சித்திரை முதல் நாள் வாழ்த்துவேன்.
Rate this:
Cancel
பைரவர் சம்பத் குமார் 1). எல்லா வருட புத்தாண்டையும் கொண்டாடுங்க. கோவிலுக்கு போங்க. அர்ச்சனைப் பண்ணுங்க.2) நம்ம தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுங்க.3). தமிழர் பத்தாண்டு சித்தரை ஒன்று அதாவது வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி. அன்றைக்குதான் நமது சட்ட மேதை திரு அம்பேத்கர் பிறந்த நாளும். இரண்டையும் சேர்த்து கோவில்களில் அர்ச்சனைப் பண்ணி கொண்டாடுங்க.4). அன்றைக்குதான் அதாவது வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெள்ளிகிழமை மற்றும் உத்திராடம் மற்றும் அபிஜித் நட்சத்திரம் நாள். சிறப்பா கொண்டாடுங்க. நல்லது நடக்கும்.5). முதல்வர் மற்றும் அவரது குடும்பத்திற்கு கிறிஸ்துமஸ் மற்றும் 2023 புத்தாண்டு வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X