ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது பட்டியலில் அதிகம் ஆடர் செய்யும் உணவுப் பட்டியல்களை வெளியிடுவது வழக்கம். அதன்படி 2022 ஆம் ஆண்டில் அதிகம் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட உணவுப் பட்டியல்களை உணவு டெலிவரி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.
அதன்படி இந்தாண்டும் முதலிடத்தைப் பிரியாணி பிடித்துள்ளது. இது இந்தாண்டு மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் பிரியாணி தான் முதல் இடத்தை பிடிக்கும். ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஒவ்வொரு நிமிடமும் நாடுமுழுவதும் 137 பிரியாணி டெலிவரி செய்துள்ளதாகவும், பிரியாணிக்குப் போட்டியாக இந்தாண்டு சில உணவு வகைகள் ஆர்டர் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக சிக்கன் பிரியாணி, மசாலா தோசை, சிக்கன் ஃப்ரைட் ரைஸ், பனீர் பட்டர் மசாலா, பட்டர் நான், வெஜ் ஃபிரைட் ரைஸ், வெஜ் பிரியாணி மற்றும் தந்தூரி சிக்கன் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து இத்தாலியன் பாஸ்தா, பீட்சா, மெக்சீன் பவுல், ஸ்பைசி ராமன், சுஷி போன்ற உணவு வகைகளையும் ஆர்டர் செய்துள்ளதாகவும், இதைத் தவிர்த்து ரவியோலி, பிம்பாப் போன்ற வெளிநாட்டு உணவு வகைகளையும் ஆர்டர் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு வகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் இந்தியர்கள் ஸ்நாக்ஸ் வகைகளையும் அதிகளவில் ஆடர் செய்துள்ளனர். இதில் முதலிடத்தில் சமோசா பிடித்துள்ளது. 2022-இல் மட்டும் 4மில்லியன் அடர்களைச் செய்துள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக பாப்கார்ன், பாவ் பாஜி, பிரெஞ்சு ப்ரைஸ், கார்லிக் பிரட்ஸ்டிக்ஸ் உள்ளிட்ட சிற்றுண்டிகள் இடம் பிடித்துள்ளது.
இனிப்பு வகைகளில் குலாப்ஜாமூன் 2.7மில்லியன் ஆர்டர்களை பெற்றுள்ளது. இந்தியாவில் உள்ள ஸ்ரீநகர்,மூணாறு உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் முதலில் ஆர்டர் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது பட்டியலில் அதிகம் ஆடர் செய்யும் உணவுப் பட்டியல்களை வெளியிடுவது வழக்கம். அதன்படி 2022 ஆம் ஆண்டில் அதிகம்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
-->