லேப்டாப் + டேப்: டூ இன் ஒன் டூயல் டிஸ்பிளே.. கெத்து காட்டும் லெனோவா!

Updated : டிச 31, 2022 | Added : டிச 31, 2022 | |
Advertisement
இந்திய சந்தையில் முதன்முதலாக டூயல் டிஸ்பிளே அம்சம் கொண்ட லேப்டாப் (Dual Display Laptop) அறிமுகமாகவுள்ளது.இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன்களை போல ஏராளமான வடிவில் லேப்டாப்களும் வரத்தொடங்கியுள்ளன. நாம் இதுவரை, டூயல் ஸ்பீக்கர் டூயல் டிஸ்பிளே ஸ்மார்ட்போன் என்ற டூயல் ட்ரெண்டிங் வரிசையில் இப்போது புதிதாக டூயல் டிஸ்பிளே லேப்டாப் (Dual Display Laptop) அறிமுகமாக உள்ளது. லெனோவா நிறுவனம் முதன்முதலாக
Lenovo Yogabook 9i 13 dual display laptop could launch at Jan 5, 2023லேப்டாப் + டேப்: டூ இன் ஒன் டூயல் டிஸ்பிளே.. கெத்து காட்டும் லெனோவா!

இந்திய சந்தையில் முதன்முதலாக டூயல் டிஸ்பிளே அம்சம் கொண்ட லேப்டாப் (Dual Display Laptop) அறிமுகமாகவுள்ளது.

இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன்களை போல ஏராளமான வடிவில் லேப்டாப்களும் வரத்தொடங்கியுள்ளன. நாம் இதுவரை, டூயல் ஸ்பீக்கர் டூயல் டிஸ்பிளே ஸ்மார்ட்போன் என்ற டூயல் ட்ரெண்டிங் வரிசையில் இப்போது புதிதாக டூயல் டிஸ்பிளே லேப்டாப் (Dual Display Laptop) அறிமுகமாக உள்ளது. லெனோவா நிறுவனம் முதன்முதலாக யோகா புக் 9ஐ (Lenovo YogaBook 9i 13 Dual Display Laptop) எனும் டூயல் டிஸ்ப்ளே கொண்ட லேப்டாப்பை அறிமுகம் செய்யவுள்ளது.



latest tamil news


இந்த லேப்டாப்பின் (laptop) இரண்டு பக்கங்களிலும் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இது ஃபோல்டிங் டைப் டிஸ்பிளேவுடன் (folding type laptop display) வருகிறது. அதாவது, இந்த டூயல் டிஸ்பிளே கொண்ட லேப்டாபை இரண்டாக மடக்கிக்கொள்ளலாம். முழுமையாக விரித்து வைத்தால் சாதாரண லேப்டாப் (laptop device)பாதியாக மடக்கினால் யோகா லேப்டாப்பாக (yoga laptop) பயன்படுத்தலாம். அதையே முழுமையாக மடித்தால் போல்ட்டிங் டேப்லெட் (folding tablet) போல பயன்படுத்தலாம்.



latest tamil news


ஜனவரி 5ம் தேதி லாஸ் வேகாஸில் தொடங்கும் CES 2023 நிகழ்வில் இந்த சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிகிறது. லைட்போப் டிவைஸ், திங்க்பேட் X1 (thinkpad X1) போல்ட் (ThinkPad X1 Fold) போன்ற வடிவமைப்பைக் கொண்ட டூயல் 13' இன்ச் டிஸ்பிளேவுடன் வருகிறது. அதுமட்டுமல்லமல், லேப்டாப் (laptop) மற்றும் டேப்லெட் (tablet) போல் மடிக்கும்போது இரண்டு டிஸ்பிளேக்களுக்கு இடையே வைக்கக்கூடிய ஃப்ரீ-ஃப்ளோட்டிங் கீபோர்டு டிவைஸ் (free-floating keyboard device) வழங்கப்பட்டுள்ளது.



latest tamil news


மேலும், இந்த லேப்டாப்பின் பேசல்கள் சற்று நீண்டு செல்லும் என கூறப்படுகிறது. இதன், கேமரா மற்றும் ஃபேஸ் அன்லாக் ஹார்டுவேர் ஆகியவற்றைத் தவிர, மற்ற விவரக்குறிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இணையத்தில் கசிந்த் தகவலின்படி டார்க் டர்க்கைஸ் நிறத்தில் வரும் என்பதைக் காட்டுகிறது. அதேபோல், மற்ற துடிப்பான வண்ணங்களிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X