வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்...... ...
அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'லோக்சபா தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், தி.மு.க.,வினர் தீவிர கவனம் செலுத்த வேண்டியது, பா.ஜ., மீது தானே தவிர, அ.தி.மு.க., மீது அல்ல' என, சென்னையில் நடந்த, தி.மு.க.,வின் அனைத்து அணி நிர்வாகிகள் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
![]()
|
'தமிழகம் ஈ.வெ.ரா., மண்; இங்கு ஜாதி, மத வேறுபாடு இல்லாத விடியல் ஆட்சி, நல்லாட்சி நடக்கிறது. எந்த நிலையிலும், எந்தக் காலத்திலும், பாசிச மதவாத கட்சியான, பா.ஜ., தமிழகத்தில் காலுான்ற முடியாது. அதன் சின்னமான தாமரை, எந்த வகையிலும் தமிழகத்தில் மலரவே மலராது' என, மேடைகள் தோறும் முழங்கி வந்தனர், தி.மு.க.,வினர்; அத்துடன், ஹிந்து மதத்தையும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விமர்சித்தும் வந்தனர்.
அதை தட்டிக்கேட்க நாதியற்றவர்களாக ஹிந்துக்கள் வேதனையோடு இருந்த போது, தமிழக பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை, தி.மு.க.,வின் விமர்சனங்களுக்கு அவ்வப்போது சரியான பதிலடி கொடுத்து வருகிறார்.
இதனால், ஹிந்துக்களின் பார்வை, பா.ஜ., பக்கம் திரும்பியுள்ளது; அந்தக் கட்சிக்கு ஆதரவும் பெருகி வருகிறது. இப்போது அதையும் தாண்டி, ஈ.வெ.ரா., மண் என்ற அந்தஸ்தை தமிழகம் இழந்து, ஆன்மிக பூமியாகி விடுமோ என, திராவிட செம்மல்கள் அஞ்சும் நிலை உருவாகி விட்டது. அதனால் தான், பல பிரிவுகளாக உடைந்துள்ள, அ.தி.மு.க., இன்று முதல்வர் ஸ்டாலினுக்கு, 'லெட்டர் பேடு' கட்சி போல தெரிகிறது; மேலும், அசுர பலத்துடன் பா.ஜ., உயர்ந்து நிற்பதும் அவருக்கு புரிகிறது.
வீராப்பு பேசிய திராவிட செம்மல்கள், பா.ஜ.,வை பார்த்து உள்ளுக்குள் அஞ்சத் துவங்கி விட்டனர். அதன் வெளிப்பாடே, 'பா.ஜ.,வை எளிதாக எடை போடாமல், இப் போதே அக்கட்சியை எதிர்கொள்ள ஆயத்தமாகி விடுங்கள்' என, கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள வேண்டுகோள்!
![]()
|
இனியும், ஈ.வெ.ரா., கொள்கையை பேசுவதுடன், 'ஆரியத்துக்கு எதிராக போராடுகிறோம்' என, தி.மு.க.,வினர் கூறி வந்தால், தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட கதையாகி விடும் என்பதே நிதர்சனம். லோக்சபா தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றால், தமிழகத்தை ஆன்மிக பூமியாக மாற்றி விடும் என்பதில் சந்தேகமில்லை. மொத்தத்தில், பா.ஜ.,வின் செயல்பாட்டால், ஸ்டாலினுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்து விட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement