ரோஜா மலர்கள் அனைவராலும் விரும்பப்படுவதைப் போல, இதன் மருத்துவ குணங்களும் அளவில்லாதது. ரோஜா மலர்களிலிருந்து செய்யப்படும் குல்கந்து பல்வேறு மருத்துவ பயன்களைக் கொண்டது.
இதய பாதுகாப்பு
![]()
|
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். ரோஜா குல்கந்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதயம் பலமாவதுடன், இதய நோய்க்கு சிறந்த மருந்து..
உடல் உஷ்ணம்
![]() Advertisement
|
இன்றளவில் அனைவரும் சந்திக்கும் பெரும் பிரச்னைகளில் ஒன்று உஷ்ணம் அதிகரிப்பு.தவறான உணவு, தூக்கமின்மை போன்ற பல்வேறு காரணங்களால் உடலின் வெப்பம் அதிகரித்துப் பல நோய்களை வழிவகை செய்கிறது. உடல் உஷ்ணத்தைக் குறைக்கக் காலை, இரவு வேளையில், சாப்பாட்டிற்கு முன் குல்கந்தைச் சாப்பிட்டு வந்தால் உஷ்ணம் குறைவதோடு, உடல் ஆரோக்கியம் பெறும்.
ஆண்மை குறைபாடு
![]()
|
உடலில் அதிக வெப்பம் அதிகரிப்பதால், ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி குறைந்து மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது. உஷ்ணம் அதிகம் உள்ள ஆண்கள் காலை, மாலை வேளைகளில் குல்கந்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியாவதோடு மட்டுமல்லாமல் மலட்டுத் தன்மைக்கு சிறந்த மருந்து.
மாதவிடாய் பிரச்னை
![]()
|
இன்றைய இளம்பெண்கள் பெரும்பாலனோர் சந்திக்கும் முக்கிய பிர்சனைகளில் ஒன்று மாதவிடாய் பிரச்னை. இதற்கு குல்கந்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் மாதவிடாய் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் அருமருந்தாயுள்ளது.
மலச்சிக்கல்
![]()
|
மலச்சிக்கல் குறையக் குல்கந்து சிறந்த மருந்தாக விளங்குகிறது. ரோஜா குல்கந்திற்கு வயிற்றில் இருக்கும் செரிமான அமிலங்களின் சம நிலையைச் சீர் செய்யும் சக்தி அதிகம் உள்ளது. மேலும் உங்கள் பசியை மேம்படுத்த உதவுகிறது. கர்ப்பிணிப் பெண்களும் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க ரோஜா குல்கந்து சாப்பிடலாம்.