வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காபூல்: ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ விமான தளத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறுகையில், இன்று(ஜன.,1) காலை விமான நிலையத்தில் குண்டுவெடித்தது. இந்த விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
அந்த பகுதியில் வசிப்பவர்கள் கூறுகையில், இன்று காலை 8 மணியளவில் பயங்கர வெடிசத்தம் கேட்டது. இதனையடுத்து அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். அந்த பகுதி வழியாக செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன என தெரிவித்தனர்.

ஆப்கனில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததும், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் அடிக்கடி குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர். அதில், ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அருகிலும் குண்டுவெடித்தது. அந்நாட்டின் முன்னாள் பிரதமர் அலுவலகம் அருகிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.