வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: 2022ம் ஆண்டில் ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம் காங்கிரஸிக்கு புதிய ஒளியைக் கொடுத்தது என சிவசேனா எம்.பி சஞ்சவ் ராவத் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: 2022ம் ஆண்டில் ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம் காங்கிரஸிக்கு புதிய ஒளியைக் கொடுத்தது. ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம் இந்த ஆண்டும் அப்படியே தொடர்ந்தால், அடுத்த 2024 தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும். ராகுலின் ஒற்றுமை யாத்திரை பலனளிக்கும் என நம்புகிறேன்.
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரிவினைவாதம் மற்றும் வெறுப்புணர்வை பரப்பக் கூடாது. ராமர் கோயில் விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதால் அதனைப் பற்றி பேசி ஓட்டு பெற முடியாது. அதனால், லவ் ஜிகாத் என்ற புதிய விஷயம் கையிலெடுக்கப்பட்டது.
லவ் ஜிகாத் என்ற ஆயுதம் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மற்றும் ஹிந்துக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தவும் பயன்படுத்தப்படுகிதா?. நடிகை துனிஷா சர்மா மற்றும் ஷ்ரத்தா வால்கர் இறந்தது லவ் ஜிகாத் கிடையாது. ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிளவை உருவாக்குவது புதிய பிரிவினைக்கு வழிவகுக்கும்.

அனைத்து வகுப்பைச் சேர்ந்த பெண்களும் அட்டுழியங்களை சந்திக்கிறார்கள். இந்த 2023ம் ஆண்டில் நாட்டின் நம்பிக்கையில் எந்த ஒரு அச்சமும் இல்லை. சமூகத்தில் வெறுப்பு மற்றும் பிளவுகளை உருவாக்குவது என்று அர்த்தமல்ல. வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வு பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.