வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கடந்த டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி, ரூ.1,49,507 கோடி ஆக வசூல் ஆகி உள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
டிசம்பர் மாதம் வசூலான ரூ.1,49,507 கோடி ஜிஎஸ்டி.,யில்
சிஜிஎஸ்டி - ரூ. 26,711 கோடி
எஸ்ஜிஎஸ்டி - ரூ.33,357 கோடி
ஐஜிஎஸ்டி- ரூ.78,434 கோடி( பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.40.263 கோடி அடங்கும்)
செஸ் - ரூ.11,005 கோடி( பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.850 கோடி அடங்கும்) வசூல் ஆகி உள்ளது.

2022 டிச., வசூலான ஜிஎஸ்டி ஆனது, 2021 டிச., வசூலானதை விட 15 சதவீதம் அதிகம் ஆகும். மேலும், 2021 டிச., காட்டிலும், கடந்த ஆண்டு டிச., மாதம் பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த வருமானம் ஆனது 8 சதவீதமும், உள்நாட்டு பரிமாற்றம் மூலம் கிடைத்த வருமானம் 18 சதவீதம் அதிகம் ஆகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.