வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை,-கோவில் நிர்வாகம், பக்தர்களின் வசதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய, பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
![]()
|
அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன் சுற்றறிக்கை:
அறநிலையத் துறை சட்டத்தின் படி, கோவில்களின் அசையும், அசையா சொத்துக்கள், ஆவணங்கள், கோப்புகள், திட்டங்கள், வரவு - செலவினங்களை, கமிஷனர் அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர் ஆய்வு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, நான்கு துணை கலெக்டர்கள் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அறநிலையத் துறையின், 20 மண்டலங்களிலும் ஆய்வு செய்து, கமிஷனருக்கு ஆய்வறிக்கை சமர்ப்பிப்பார்கள்.
![]()
|
இந்த ஆய்வின்போது செயல் அலுவலர் மற்றும் பணியாளர் வருகை பதிவேடு, கோவில் துாய்மை, பக்தர்களின் அடிப்படை வசதிகள், வரவு - செலவினங்கள், கட்டணச் சீட்டுக்கள் விற்பனை, அன்னதான திட்டம் உள்ளிட்ட, 18 விஷயங்களை ஆய்வு செய்வர்.
அவர்களுக்கு கோவில் நிர்வாகத்தினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஒத்துழைப்பு வழங்காதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement