வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: மேடைகளில் பெண்களை ஆபாசமாக பேசுவது திமுகவுக்கு வாடிக்கையாக இருந்து வருகிறது என தமிழக பா.ஜ., தலைவர் கூறியுள்ளார்.

சென்னை, விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே, தி.மு.க., சார்பில் அன்பழகன் நுாற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில், எம்.பி.,க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ., பிரபாகர ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எம்.பி.,யும், தி.மு.க., மகளிர் அணி பொறுப்பாளருமான கனிமொழி பங்கேற்ற பொதுக் கூட்டத்தில், பெண் காவலரிடம், அக்கட்சி பிரமுகர்கள் அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை விருகம்பாக்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை இரண்டு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர்களை கைது செய்ய முற்பட்ட போலீஸ் சாரிடம், திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உச்சகட்ட அவலம்.

மேடைகளில் பெண்களை ஆபாசமாக பேசுவது திமுகவுக்கு வாடிக்கையாக இருந்தாலும், திமுக பார்., உறுப்பினர் கனிமொழி பங்கேற்ற பொதுக் கூட்டத்திலும், இவ்வாறு திமுக நிர்வாகிகள் நடந்து கொண்டது அதிகார மமதையின் வெளிப்பாடாகவே தெரிகிறது.
இந்த பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு திமுக நிர்வாகிகளையும் கைது செய்ய தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.