பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு: எதிர்த்த 58 மனுக்கள் தள்ளுபடி

Updated : ஜன 02, 2023 | Added : ஜன 02, 2023 | கருத்துகள் (90) | |
Advertisement
புதுடில்லி: பணமதிப்பிழப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு 2016 நவ -8ல் அறிவிக்கப்பட்டது. நாட்டில் உள்ள கள்ளப்பணப்புழக்கத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.இந்த அறிவிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 58 மனுக்கள் பல்வேறு தரப்பினர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பணமதிப்பிழப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு 2016 நவ -8ல் அறிவிக்கப்பட்டது. நாட்டில் உள்ள கள்ளப்பணப்புழக்கத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.latest tamil news

இந்த அறிவிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 58 மனுக்கள் பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான நீண்டகால விசாரணைக்கு பின்னர் இன்று தீர்ப்பளித்தது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.


5 பேர்களை அரசியல் சாசன பெஞ்சில் அப்துல் நசீர் தலைமையில் பி.ஆர்.கவாய், ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்ரமணியன், மற்றும் பி.வி. நாகரத்னா ஆகிய நீதிபதிகள் இடம்பெற்றிருந்தனர்.


நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு விவரம் வருமாறு;latest tamil newsவிதிமுறை மீறலும் இல்லை


மத்தியஅரசு ரிசர்வ் வங்கி இடையில் 6 மாத காலமாக நடந்த ஆலோசனைப்படியே இந்த பணமதிப்பிழப்பு நடந்துள்ளது. எந்தவொரு விதிமுறை மீறலும் இல்லை. அரசு எடுக்கும் நடவடிக்கையை கட்டுப்படுத்த கோர்ட் விரும்பவில்லை,


மத்திய அரசின் பொருளாதார கொள்கை முடிவில் தலையிட விரும்பவில்லை. அரசின் பணமதிப்பிழப்பு செல்லும். இவ்வாறு பெரும்பாண்மையான நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர் .


5 ல் 4 நீதிபதிகள் மத்திய அரசின் அறிவிப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளனர்.


நாகரத்னா என்ற நீதிபதி ; ஆர்பிஐ விதி முறைப்படி இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்று மாற்று கருத்து கொண்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (90)

g.s,rajan - chennai ,இந்தியா
03-ஜன-202318:41:01 IST Report Abuse
g.s,rajan If the Cash Transactions are done through the bank Account the actual Money could have been brought to the book but here in De Monetization it is not the case, it is totally absurd that the money is changed with out any Accountability.So it is definitely a failure, the Black Money is not fully Captured in India and still a lot of Money is in Circulation.....
Rate this:
Cancel
shyamnats - tirunelveli,இந்தியா
03-ஜன-202302:43:53 IST Report Abuse
shyamnats மக்களுக்கு உருப்படியான நிர்வாக சேவை செய்யாமல், எண்ணற்ற இலவசங்களை ஓட்டுக்காக வாரி வழங்குவதை, நீதி மன்றங்கள் , இது அரசின் கொள்கை முடிவு என்று தடை செய்ய மறுத்த பொது, இந்த சுயநல கட்சிகள் ஆகா, ஓகோ என்று வரவேற்றனவே? இப்பொழுது மட்டும் கசக்கிறதோ? நாட்டின் பாதுகாப்பு என்று வரும் பொழுது வரவேற்கப் படவேண்டியதே. எதிர் கட்சிகளாக செயல் படவேண்டியவை, நாட்டின் நலனுக்கே எதிரி கட்சிகளாக செயல் படுகின்றன
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
03-ஜன-202300:33:58 IST Report Abuse
g.s,rajan இப்போது புழக்கத்தில் இருக்கும் ஐநூறு ரூபாய் நோட்டுக்களை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு செல்லாது என்று பண மதிப்பிழப்பு செய்து அரசாங்கம் மீண்டும் அறிவித்தால் உண்மையான பணம் கணக்கிற்கு வருமா? கறுப்புப் பணமும், கள்ள நோட்டுக்களும் முற்றிலும் ஒழிந்து விடுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X