சென்னை: விஷ்வ ஹிந்து பரிஷத் -எனும் வி.எச்.பி.,யின் வழக்கறிஞர் பிரிவு, அகில இந்திய இணை அமைப்பாளராக, பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதியின் கணவர் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்துாரில், கடந்த வாரம் நடந்த, வி.எச்.பி., அகில இந்திய நிர்வாகிகள் கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆர்.எஸ்.எஸ்., மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.,யில் மாநில செயலராக இருந்த சீனிவாசன், கடந்த 20 ஆண்டுகளாக வி.எச்.பி,யில் பல்வேறு பொறுப்பாளராக இருந்து வருகிறார்.

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வி.எச்.பி., மாநிலத் தலைவராக இருந்த அவர், தற்போது வி.எச்.பி., அகில இந்திய வழக்கறிஞர் பிரிவின் இணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விஷ்வ ஹிந்து பரிஷத் எனும் வி.எச்.பி.,யின் வட தமிழக தலைவராக சென்னையைச் சேர்ந்த வாஸ்து நிபுணர் ஆண்டாள் சொக்கலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.