டில்லி குடியரசு தின விழா அணிவகுப்பு: தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி

Updated : ஜன 03, 2023 | Added : ஜன 03, 2023 | கருத்துகள் (15) | |
Advertisement
புதுடில்லி: டில்லியில் ஜன.,26ல் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவை முன்னிட்டு நடத்தப்படும் அலங்கார ஊர்தி அணிவகுப்பிற்கு தமிழக அரசு வழங்கப்பட்ட 3 மாதிரி ஊர்திகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.இந்திய குடியரசு தினம் ஜன.,26ல் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் தலைநகர் டில்லியில் முப்படைகள், மத்திய ஆயுதப் படைகள், பிற துணைப்படைகள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் சார்பாக
Delhi Republic Day Parade: Permission for Tamil Nadu Govts Tableau டில்லி குடியரசு தின விழா அணிவகுப்பு: தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: டில்லியில் ஜன.,26ல் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவை முன்னிட்டு நடத்தப்படும் அலங்கார ஊர்தி அணிவகுப்பிற்கு தமிழக அரசு வழங்கப்பட்ட 3 மாதிரி ஊர்திகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.இந்திய குடியரசு தினம் ஜன.,26ல் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் தலைநகர் டில்லியில் முப்படைகள், மத்திய ஆயுதப் படைகள், பிற துணைப்படைகள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் சார்பாக அலங்கார ஊர்திகளில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்படும்.


அந்த வகையில் கடந்த 2022ம் ஆண்டுக்கான தமிழக அரசின் அலங்கார ஊர்தியில் வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார் ஆகியோரை மையமாக வைத்து வாகனம் உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த அலங்கார ஊர்திக்கு மத்திய பாதுகாப்புத்துறை வல்லுநர் குழு அனுமதி அளிக்கவில்லை.latest tamil news

கடந்த குடியரசு தினத்தில் தமிழகம் மட்டுமல்லாமல், கேரமா, மேற்குவங்கம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநில ஊர்திகளுக்கும் அனுமதி தரப்படவில்லை.


இது அப்போது பிரச்னையை கிளப்பியது. இந்த நிலையில் நடப்பு 2023ம் ஆண்டின் குடியரசு தின விழாவிற்காக தமிழக அரசு தரப்பில் மகளிர் சாதனையாளர்கள் உள்ளிட்ட 3 மாதிரி ஊர்திகளை தமிழக அரசு வழங்கியிருக்கிறது.


அந்த ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோல், ஆந்திரா, அசாம், குஜராத், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநில அலங்கார ஊர்திகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளது.


7 கட்டங்களாக நடைபெற்ற தேர்வுகளின் இறுதியில் தமிழகம் உட்பட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஊர்திகள் தேர்வு செய்யப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (15)

sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
03-ஜன-202321:11:42 IST Report Abuse
sankaranarayanan நாடு சுதந்திரம் பெற பாடுபட்டவர்கள் சிலைகள் அல்லது உருவம் இருந்தால்மட்டும் அனுமதி உண்டு இல்லையே அனுமதி திரும்பப்படும். பெரியார் சிலை அண்ணா சிலை கலைஞர் சிலை சின்னவர் சிலைகள் வைத்திருந்தால் அனுமதி மறுப்பு
Rate this:
Cancel
Dharma - Madurai,இந்தியா
03-ஜன-202319:50:34 IST Report Abuse
Dharma சின்னசாமி, பெரியசாமி, கருப்புசாமி, ரத்தினசாமி என்று பெயர் வைத்துக்கொண்டிருக்கலாம். எதற்கு ராமசாமி?
Rate this:
Cancel
Jai -  ( Posted via: Dinamalar Android App )
03-ஜன-202317:37:22 IST Report Abuse
Jai இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததை பேசியவர் பெரியார். அவருடைய உருவத்தை குடியரசு தின அணிவகுப்பில் வைப்பது நியாயம் அற்றது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X