வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: நேற்று பாஜ தலைவர் அண்ணாமலை கொடுத்த பேட்டி தொடர்பாக, தினமலர் வெளியிடாத ஒரு செய்தியை தினமலர் வெளியிட்டதாகக் கூறி தினமலர் பெயரில் போலியான செய்தி கார்டு உருவாக்கப்பட்டு பரப்பப்படுகிறது.
தினமலர் டிஜிட்டலுக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான வாசகர்கள் இருக்கின்றனர். எனவே தினமலர் பெயரில் செய்திகளை உருவாக்கினால் அதை மக்கள் நம்புவார்கள்; அந்த தகவலும் வேகமாக பரவும் என சில புல்லுருவிகள் நினைக்கின்றனர். தினமலரின் இந்த புகழை பயன்படுத்தி சிலர் போலியாக தினமலர் பெயரில் செய்தி கார்டுகளையும், மீம்களையும் உருவாக்கி பரப்புகின்றனர்.
சைபர் சட்டப்படி இது பெரிய குற்றம். இங்கே தினமலர் பெயரில் பதிவிடப்பட்டுள்ள பாஜ தலைவர் அண்ணாமலை தொடர்பான 'கார்டை' சிலர் உள்நோக்கத்துடனும் தினமலர் நாளிதழுக்கும், தினமலர் டாட் காம் இணையதளத்திற்கும் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், மக்கள் மத்தியில் தினமலர் நாளிதழுக்கு உள்ள நற்பெயர் கெடுக்க வேண்டும் என்பதற்காகவும் உருவாக்கி உள்ளனர்.

தினமலருக்கு எதிராக செய்யப்பட்டுள்ள இந்த செயல் ஒரு சைபர் குற்றம். இந்த குற்றம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசிலும் புகார் செய்யப்பட உள்ளது. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.