தண்ணீர் பாதுகாப்பில் மக்களின் பங்களிப்பு முக்கியம்: பிரதமர்
தண்ணீர் பாதுகாப்பில் மக்களின் பங்களிப்பு முக்கியம்: பிரதமர்

தண்ணீர் பாதுகாப்பில் மக்களின் பங்களிப்பு முக்கியம்: பிரதமர்

Updated : ஜன 05, 2023 | Added : ஜன 05, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி : தண்ணீர் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் அரசின் முயற்சிகள் மட்டும் போதாது. மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.ம.பி., மாநிலத்தில் துவங்கிய நீர்வளத்துறை மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது: தண்ணீர பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். நீர்நிலைகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டால்,
Water vision towards 2047 big contribution to Amrit Kaal: PM Modi at All India Annual State Ministers Conference on Waterதண்ணீர் பாதுகாப்பில் மக்களின் பங்களிப்பு முக்கியம்: பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : தண்ணீர் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் அரசின் முயற்சிகள் மட்டும் போதாது. மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


ம.பி., மாநிலத்தில் துவங்கிய நீர்வளத்துறை மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது: தண்ணீர பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். நீர்நிலைகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டால், வேளாண்துறை வேகமாக வளர்ச்சி பெறும். நீர் ஆதாரங்களை வலுப்படுத்தி சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.


மாநில அரசுகள் தொடர்ந்து மத்திய அரசுடன் பணியாற்றி நீர் ஆதாரங்களை வலுப்படுத்த வேண்டும். தொழில்நுட்பங்களை நீர் சேமிப்பு துறையில் பயன்படுத்த வேண்டும். இதில், ஏராளமான ஸ்டார்ட் அப்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன.


தண்ணீர் பாதுகாப்பிற்கு அரசின் முயற்சிகள் மட்டும் போதாது. மக்களுடன் சமுதாயத்தின் அனைத்து தரப்பினரையும் இணைத்து செயல்பட வேண்டும். நீர் பாதுகாப்பு தொடர்பான பிரசாரங்களில் முடிந்வரை மக்கள், சமூக அமைப்புகளை ஈடுபடுத்த வேண்டும். மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம்.


latest tamil news

தொழில் மற்றும் விவசாயம் என்பது தண்ணீர் தேவைப்படும் இரண்டு துறைகள். ஜல் ஜீவன் மிஷன் ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் வழங்குவதற்கான முக்கிய வளர்ச்சி அளவுகோலாக மாறி உள்ளது. நமது அரசியலமைப்பு அமைப்பில், தண்ணீர் பொருள் மாநிலங்களின் கட்டுப்பாட்டில் கீழ் வருகிறது. நீர் பாதுகாப்பிற்கான மாநிலங்களின் முயற்சிகள் நாட்டின் கூட்டு இலக்குகளை அடைவதில் நீண்ட தூரம் செல்லும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
வாசகர் கருத்து (6)

05-ஜன-202318:46:43 IST Report Abuse
பாரதி நீங்க நெனச்சுட்டீங்க, நிச்சயம் நடக்கும். வாழ்க.
Rate this:
Cancel
05-ஜன-202315:48:17 IST Report Abuse
அப்புசாமி ஏதோ ஒரு ஏழெட்டு வருஷமா பருவமழை பிச்சுக்கிட்டு கொட்டுது
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
05-ஜன-202315:44:35 IST Report Abuse
INDIAN Kumar தமிழ்நாட்டில் தண்ணிக்கு பஞ்சமில்லை ஊழல் கழகங்களின் ஆட்சியில்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X