திருப்பதி: தேர்தலில் தமிழகத்திலிருந்து அதிகப்படியான பாஜ., வினர் எம்.பிக்களாக வெற்றி பெற்று, மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என தமிழக பா.ஜ., தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருப்பதி சென்றார். விஐபி தரிசனம் மூலமாக ஏழுமலையானை வழிபட்டார். அப்போது தமிழக மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் அண்ணாமலையுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

இதையடுத்து, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: வரப்போகும் பாராளுமன்ற லோக்சபா தேர்தலில் தமிழகத்திலிருந்து அதிகப்படியான பா.ஜ., வினர் எம்.பிக்களாக வெற்றி பெற்று, மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.