The train passenger who got stuck - the railway guard who came suddenly! | நிலை தடுமாறிய பயணி - பாய்ந்து காப்பாற்றிய ரயில்வே காவலர்!| Dinamalar

நிலை தடுமாறிய பயணி - பாய்ந்து காப்பாற்றிய ரயில்வே காவலர்!

Updated : ஜன 06, 2023 | Added : ஜன 06, 2023 | கருத்துகள் (7) | |
இந்திய ரயில்வே தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளது. இதில் பயணி ஒருவர் ரயிலில் ஏற முயலும் போது நிலைதடுமாறி கீழே விழுகிறார். இதைப்பார்த்த ரயில்வே காவலர் ஒருவர் அவரைக் காப்பாற்றுகிறார். இதற்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது. பீகார் மாநிலம், பூர்ணியா ரயில் நிலையத்தில், ரயில் ஒன்று வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. அப்போது பயணி ஒருவர்
The train passenger who got stuck - the railway guard who came suddenly!  நிலை தடுமாறிய பயணி - பாய்ந்து காப்பாற்றிய ரயில்வே காவலர்!

இந்திய ரயில்வே தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளது. இதில் பயணி ஒருவர் ரயிலில் ஏற முயலும் போது நிலைதடுமாறி கீழே விழுகிறார். இதைப்பார்த்த ரயில்வே காவலர் ஒருவர் அவரைக் காப்பாற்றுகிறார். இதற்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.


latest tamil news

பீகார் மாநிலம், பூர்ணியா ரயில் நிலையத்தில், ரயில் ஒன்று வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. அப்போது பயணி ஒருவர் திடீரென ரயிலில் ஏற முற்படும் போது, நிலை தடுமாறி, கீழே விழுந்தார். இதைப்பார்த்த ரயில்வே காவலர் ஒருவர் கண் இமைக்கும் நேரத்தில், ஒடி வந்து அவரை காப்பாற்றும் வீடியோ காட்சிகள் ரயில் நிலையத்திலிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.

தற்போது இந்த வீடியோவை இந்திய ரயில்வே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளது. அதில் இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, இதேபோல் பயணிகள் ஓடும் ரயிலில் ஏறவே, இறங்கவோ வேண்டாம் எனப் கேட்டுக்கொண்ட்டுள்ளது. மேலும் பயணியைக் காப்பாற்றிய பாதுகாப்பு வீரருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X