வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காசர்கோடு : கேரளாவில் குழிமந்தி என்ற பிரியாணியை ஆன்லைனில் சாப்பிட்ட இளம்பெண், உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இது குறித்து மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.
காசர்கோடு மாவட்டத்தின் பெரும்பாலா பகுதியை சேர்ந்த அஞ்சு ஸ்ரீபார்வதி என்ற இளம்பெண் ஓட்டலில் பிரியாணி வாங்கி சாப்பிட்டார். தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு கர்நாடக மாநிலம் மங்களூரு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி டிச.,31ல் உயிரிழந்தார்.
இது தொடர்பாக, அந்த இளம்பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜார்ஜ் கூறுகையில், இளம்பெண் உயிர் இழந்த சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி உணவு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கேரளாவில் ஒரு வாரத்தில் உணவு சாப்பிட்டு இளம்பெண் பலியாவது இது இரண்டாவது முறையாகும். கோட்டயம் மருத்துவ கல்லூரியை சேர்ந்த நர்ஸ் ஒருவர், கோழிக்காட்டில் உள்ள உணவகம் ஒன்றில் வாங்கிய உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில் உயிர் இழந்தார்.