வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வேலுார் : ''நாம் கொதிப்படைய வேண்டும் என்பதற்காகவே, கவர்னர் ரவி இங்கு அனுப்பப்பட்டுள்ளார்,'' என, தமிழக காங்., தலைவர் அழகிரி கூறினார்.
வேலுார் மாவட்டம், சத்துவாச்சாரியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகம் என்பதற்கும், தமிழ்நாடு என்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தமிழ்நாடு என்பது தான், நம் நாடு. இதுபோன்ற பல மாநிலங்களை சேர்ந்தது தான் இந்திய அரசாங்கம்.
தமிழ்நாடு, ஆந்திரா நாடு போன்ற பல மாநிலங்களை சேர்ந்தது தான் இந்தியா. இந்தியா என்பது, ஒரு நாடு இல்லை; ஒரு தேசம். நாடு என்பது வேறு; தேசம் என்பது வேறு. நாடுகளுடைய கூட்டமைப்பு தான், தேசம்.
![]()
|
பஞ்சாபிகளும், தமிழர்களும், இந்தியர்கள் தான். அனைவரும் சேர்ந்தது தான் இந்தியா. இவை, கவர்னருக்கு தெரிய வாய்ப்பில்லை.
கவர்னர் கூறிவிட்டார் என்பதற்காக, நாம் கொதிப்படைய வேண்டாம். நாம் கொதிப்படைய வேண்டும் என்பதற்காகவே, கவர்னர் ரவி இங்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் விரோதிகள்
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை:
'மதங்களுக்கு எதிரி இல்லை என்று கூறுபவர்கள், ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வரா' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தொன்மை காலத்தில் இருந்து, தமிழர்கள் விரும்பி கொண்டாடும் பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்து கூறுவதை, வானதி சீனிவாசன் அறியவில்லையா; தமிழர் திருநாளாக கொண்டாடுவதை, அவர் அறிவாரா?
மற்ற மதங்கள் மீது வெறுப்பை காட்டுபவர்களே, ஹிந்து மதத்தின் எதிரிகள்; மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் மக்கள் விரோதிகள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.