சென்னை: சட்டசபையில் திமுக கவர்னருக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானம் தவறானது என முன்னாள் முதல்வருமான, எதிர்கட்சி தலைவருமான பழனிசாமி கூறினார்.
இது குறித்து முன்னாள் முதல்வர் பழனிசாமி சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கவர்னர் உரை ஏமாற்றம் அளிக்கிறது. கவர்னர் சபையில் இருக்கும் போது, முதல்வர் தீர்மானம் கொண்டு வருவது அவை மரபுக்கு எதிரானது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர் குலைந்து விட்டது. அமைதி பூங்காவாக இல்லை. போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.