முதல் உயிரினம்
வைரஸ் கிருமிகள்தான் உலகில் தோன்றிய முதல் உயிரினம். இதை 1892ல் முதன்முதலில் கண்டு பிடித்து பெயரிட்டவர் ரஷ்யாவின் டிமிட்ரி ஐவனாஸ்கி. 350 கோடி ஆண்டுகளாகப் பூமியில் வாழ்ந்து வரும் வைரஸ்களை மனித குலம் கண்டறிந்து 130 ஆண்டுகளாகின்றன. வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட போது அவை உயிரற்றவை என்றே கருதப்பட்டது. ஆனால் தற்போது இவை உயிரினங்களாக நிரூபிக்கப் பட்டு விட்டன. வைரஸ்களை அவற்றின் உயிரி மூலக்கூறு அடிப்படையில் ஆர்.என்.ஏ., / டி.என்.ஏ., வைரஸ் என பிரிக்கலாம். இவற்றில் பல உட்பிரிவுகளும் உண்டு.
தகவல் சுரங்கம்
அண்டார்டிகாவில் கால் தடம்
பூமியில் மக்கள் வாழத்தகுதியற்ற இடம் அண்டார்டிகா. இது முழுவதும் பனிக்கட்டியால் சூழப்பட்டுள்ளது. இருப்பினும் ஆய்வுக்காக மட்டும் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் அங்கு சென்று வருகின்றனர். அண்டார்டிகாவுக்கு சென்ற முதல் இந்தியர் லெப்டினல் ராம் சரண். கப்பல்படையை சேர்ந்த வானிலை ஆய்வாளரான இவர், 1960ல் ஆஸ்திரேலியாவில் இருந்து தென் முனைக்கு சென்ற ஆராய்ச்சிக் குழுவில் இடம் பெற்றிருந்தார். உலகில் முதன்முதலாக
அண்டார்டிகாவில் கால் பதித்தவர் நியூசிலாந்தின் அலெக்சாண்டர். 1895ல் அங்கு சென்றார்.