நீர்வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன், வேலுாரில் நிருபர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில், 'தமிழகத்தில் தொடர்ந்து கனிம வளங்கள் கொள்ளை போவதாக, எதிர்க்கட்சி தலைவர்பழனிசாமி பேசி வருகிறார். இதுகுறித்து, சட்டசபையில் அவருக்கு பதில் சொல்வேன்' என்றார்.
அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'சட்டசபையில், அ.தி.மு.க., ஆட்சியில் மட்டும், கனிம வளங்கள் கொள்ளை போகலையான்னு, இவர் எதிர் கேள்வி கேட்பாரு... ஆனால், கடைசி வரை, தி.மு.க., ஆட்சியில் கனிமவள கொள்ளை நடப்பதாக கூறப்படும் புகாருக்கு மட்டும், பதில் சொல்லவே மாட்டாரு... இதுதான், திராவிட மாடல் அரசியல் வரலாறு...' எனக் கூற, சுற்றியிருந்தோர் ஆமோதித்து சிரித்தனர்.