சென்னை,:சென்னை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட, வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு, புதிய இருசக்கர வாகனம் வாங்க, மானியம் வழங்கும் திட்டம் உள்ளது. இத்திட்டத்தில், 25 ஆயிரம் அல்லது வாகனத்தின் 50 சதவீதம் குறைவான தொகை மானியமாக வழங்கப்படும்.
இதற்கு, வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில், ஐந்து ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். பயன்பெற விரும்புவோர், சென்னை கலெக்டர் அலுவலத்தில் உள்ள, மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.